2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார்.
குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட விதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர், “5 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சனை, மிடில் ஆர்டரில் களமிறக்கியது மிகப்பெரிய தவறு.
டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் நன்றாக விளையாடினார் என்பதற்காக, டி20-யில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சாம்சனை ஓரங்கட்டியதும் தவறுதான்.
பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி வாஷிங்டன் சுந்தரை மட்டுமே தீர்வாக கம்பீர் பார்த்தார். அக்ஷர் படேலை விட சுந்தருக்கு முக்கியத்துவம் கொடுத்தது தேவையற்ற முடிவு.
இந்திய அணி ஒரு கட்டத்தில் தோற்கும் நிலையில் இருந்தது. சில தற்செயலான நிகழ்வுகளால் சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்து இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்தது.

ஒட்டுமொத்தமாக வீரர்களைக் கையாண்ட விதம், பேட்டிங் வரிசையை மாற்றிய விதம் எனக் கம்பீர் பல தவறுகளைச் செய்திருக்கிறார்” எனச் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார்.
