GOLD PRICE TODAY | தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு – இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருக்கிறது. அந்தவகையில் 6-ந்தேதி விலை அதிகரித்து இருந்த சூழலில், 7-ந்தேதி விலை குறைந்து இருந்தது.

6-ந்தேதி நிலவரப்படி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 920-க்கும், 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 860-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது.

நேற்று சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

08-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

07-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

06-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,920

05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

04-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

08-04-2026- ஒரு கிராம் ரூ.265

07-04-2026- ஒரு கிராம் ரூ.255

06-04-2026- ஒரு கிராம் ரூ.260

05-04-2026- ஒரு கிராம் ரூ.255

04-04-2026- ஒரு கிராம் ரூ.255

Source link