இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-உம், பவுனுக்கு ரூ.2,720-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
நேற்று சந்தையில் தங்கம் விலை மூன்று முறை மாற்றம் கண்டது. மதியம் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 குறைந்து விற்பனை ஆனது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஈரான் உடனான பேச்சுவார்த்தை அறிவிப்பிற்குப் பின், தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்தது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,000 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,04,000 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
