GVM 25: "எனக்கு கிடைச்ச அன்புக்கும், மரியாதைக்கும் 'காக்க காக்க' படமும் ஒரு காரணம்"- நெகிழும் சூர்யா

சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெற்ற ‘அஞ்சல’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

சூர்யா

“மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன்

இதனைக் கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

குறிப்பாக சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெற்ற ‘அஞ்சல’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா பேசியிருக்கிறார்.

“இவர்கள் (இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்) எல்லாம் பிரம்மாக்கள் . இவர்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. உங்களுடைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

சூர்யா
சூர்யா

எனக்கு கிடைத்த அன்பும், மரியாதையும் உச்சத்திற்குப் போனதற்கு ‘காக்க காக்க’ படமும் ஒரு காரணம். அதே அன்பையும் மரியாதையையும் இப்போது வரைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய ரசிகர்களுக்கு தலை வணங்குகிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link