இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை காண மகேந்திரசிங் தோனி சென்றார். இந்நிலையில், பிசிசிஐதான் அவரை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கியமான தொடர்: இங்கிலாந்து காலநிலை, பிட்சும் ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க காலநிலை, பிட்சும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து ஒருநாள் தொடர், மிகமுக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், இத்தொடரில், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
குறிப்பாக, மூன்றாவது போட்டியில், இந்திய அணி பௌலர்கள் 387 ரன்களை வாரி வழங்கினார்கள். இது, பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போட்டியை காண சென்ற மகேந்திரசிங் தோனியிடம், பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் அறிக்கை கேட்டதாகவும், தோனியும் அறிக்கையை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கம்பீர் மீதுதான் தவறு: தோனி சமர்பித்த அறிக்கையில், தோல்விக்கு வீரர்கள் காரணமல்ல, கம்பீரின் அணித் தேர்வுதான் காரணம் என தோனி அறிக்கை சமர்பித்துள்ளாராம். அதில், ‘‘பேட்டிற்கு சாதகமான பிட்ச் எனத் தெரிந்தும், 5 முழுநேர பௌலர்களை மட்டும், கம்பீர் தேர்வு செய்தது ஏற்புடையது அல்ல. கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பிவிட்டதால், இஷான் கிஷனை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், கிஷனுக்கு முக்கியத்தும் கொடுத்து, அவரையும் பிளேயிங் 11-ல் வைத்துக் கொண்டனர்’’
‘‘அப்படி செய்யாமல், கிஷனை நீக்கி, ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும். ஷிவம் துபேவுக்கு காயம் என்றால், ஸ்பின் ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபே இருக்கிறார். ஹர்ஷ் துபேவையும் சேர்க்க முடியவில்லை என்றால், 15 பேர் கொண்ட பட்டியலில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டும் தேர்வு செய்திருப்பது தவறு. மேலும், 5 பௌலர்களுடன் மட்டுமே இந்திய அணி சென்றது. இதில், குல்தீப் யாதவை எப்படியாவது சேர்த்திருக்க வேண்டும். அதனையும், செய்யவில்லை. என்னை கேட்டால், 15 பேர் கொண்ட அணித் தேர்வு, பிளேயிங் 11 தேர்வு எதுவுமே திருப்திகரமாக இல்லை’’ என தோனி, பிசிசிஐயிடம் அறிக்கை சமர்பித்துள்ளாராம்.
இதனால், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரை சேர்க்கவிடாமல், இளம் பௌலர்களை மட்டும், கம்பீர் தான் தேர்வு செய்தாராம். இப்படி, தன் இஷ்டப்போக்கில் செயல்பட்டு, ஒருநாள் தொடரை இழக்க முக்கிய காரணமாக கம்பீர் இருந்திருக்கிறார்.
ஏற்கனவே டெஸ்ட், டி20 பார்மெட்டில் இந்திய அணியை பலவீனப்படுத்திய கம்பீர், தற்போது ஒருநாள் பார்மெட்டிலும் இந்திய அணியை பலவீனப்படுத்த ஆரம்பித்துவிட்டாரோ என்ற அச்சத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதனால், இனி அணித் தேர்வில் கம்பீரை, தலையிட வைக்க கூடாது என்ற முடிவில் பிசிசிஐ இருக்கிறது.
மேலும், இனி இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் தராமால், திறமையான சீனியர் வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அணியை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். 388 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கியபோது சீனியர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இளம் வீரர்கள்தான் சொதப்பினார்கள். இதனால், இனி சீனியர்களுக்கும் டெஸ்ட், டி20 பார்மெட்டில், உரிய முக்கியத்துவம் அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அணியில் சீனியர் வீரர்கள் இருந்தால், தன் சொல்பேச்சை கேட்க மாட்டார்கள் என்பதால்தான், கம்பீர் சீனியர் வீரர்களை தவிர்ப்பதாக கருதப்படுகிறது.
