IND vs NZ 2nd T20 – வரலாறு படைத்தார் அர்ஷ்தீப் சிங்: நம்பர் 1 பௌலராக சாதனை படைப்பது உறுதி – arshdeep singh took 2 wickets in 2nd t20i match vs new zealand team and created history

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், 226 ரன்கள் இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. டிம் செய்பர்ட் 6 பந்தில் 7 ரன்னை அடித்து அவுட் ஆன நிலையில், பின் ஆலன், 14 பந்தில் 16 ரன்களை சேர்த்து நடையைக் கட்டினார். அடுத்து, டேரில் மிட்செலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர், 5 பந்தில் 6 ரன்னைதான் அடித்தார்.

இப்படி, முதல் மூன்று பேட்டர்கள் சொதப்பியப் பிறகு, கிளென் பிலிப்ஸ் மற்றும் பெவன் ஜாகப்ஸ் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். இதில், பிலிப்ஸ் 43 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்களை குவித்து அசத்திய நிலையில், ஜாகபஸ் 46 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 58 ரன்களை மட்டுமே அடித்தார்.

இப்படி, இருவரும் சிறப்பாக ஆடி அவுட் ஆனப் பிறகு, இறுதிக் கட்டத்தில், மைக்கேல் பிரேஸ்வெல் 2 பந்தில் 10 ரன்களை சேர்த்ததால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 180/5 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில், அர்ஷ்தீப் சிங், சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். பிரின்ஸ் யாதவ், 4 ஓவர்களில் 30 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கி, ஒரு விக்கெட்டை எடுத்தார்.

அர்ஷ்தீப் சிங் சாதனை : டி20 கிரிக்கெட்டில், ஒரு வருடத்தில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பௌலர்கள் லிஸ்டில், அர்ஷ்தீப் சிங், 38 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். 2022ஆம் ஆண்டில் புவனேஷ்வர் குமார் 37 விக்கெட்களை எடுத்து 2ஆவது இடத்தில் உள்ளார். இதே அர்ஷ்தீப் சிங், 36 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

உலக அளவில், ஒரு வருடத்தில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய டி20ஐ பௌலர்களில், அர்ஷ்தீப் சிங் 2ஆவது இடத்தில் இருக்கிறார். ஜாஸ் லிட்டில் 2022ஆம் ஆண்டில், 39 விக்கெட்களை எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹசரங்கா ஆகியோர் 38 விக்கெட்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்கள். அர்ஷ்தீப் சிங், இத்தொடரில், இன்னமும் 2 விக்கெட்களை எடுத்தாலே முதல் இடத்திற்கு முன்னேறி வரலாற்று சாதனையை படைப்பார்.

இந்திய அணி வெற்றி வாய்ப்பு : பிட்ச், துவக்கத்தில் பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால், நியூசிலாந்து அணி, முதல் 10 ஓவர்களில் 66/3 ரன்களை மட்டுமே எடுத்தது. பிறகு, கடைசி 10 ஓவர்களில் 114/3 ரன்களை குவித்து அசத்தியுள்ளனர். குறிப்பாக, கடைசி 7 ஓவர்களில் மட்டும் 99 ரன்களை குவிக்க முடிந்தது.

Source link