IND vs NZ T20 – ஓய்வு எப்போது? புது அப்டேட்டை வெளியிட்ட புவனேஷ்வர் குமார்: சொதப்பலால் திடீர் முடிவு – bhuvneshwar kumar explains about future plan after ind vs nz t20i series

2022ஆம் ஆண்டு, நவம்பருக்குப் பிறகு, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார் மீது, நியூசிலாந்து டி20 தொடரில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

நியூசிலாந்து தொடரில், முதல் மூன்று போட்டிகளிலும் வாய்ப்பை பெற்ற புவனேஷ்வர் குமார், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவரது, பந்துகள் கணிக்கும் படியாக இருக்கிறது.

முதல் மூன்று போட்டிகளிலும் சேர்த்து, 12 ஓவர்களை வீசி, ஒரேயொரு விக்கெட்டைதான் எடுத்துள்ளார். மேலும், எகனாமி 11.58ஆக இருக்கிறது. பவர் பிளே, டெத் ஓவர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பௌலராக இருக்கும் புவியால், முன்புபோல் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஓய்வு எப்போது என்பது குறித்து புவனேஷ்வர் குமார் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது, பேட்டிகொடுத்துள்ள அவர், ‘‘இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி. நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்து, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டி20 தொடர்களில் அபாரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ச்சியாக விளையாடவே விரும்புகிறேன்’’ என்றார்.

இதன்மூலம், புவனேஷ்வர் குமார், ஒருநாள் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுக்க முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

புவனேஷ்வர் குமார், கடைசியாக 2023ஆம் ஆண்டில்தான், லிஸ்ட் ஏ ஒருநாள் பார்மெட்டில் விளையாடியுள்ளார். தற்போது, மீண்டும் விஜய் சஹாரே டிராபி தொடரில் ஆட முடிவு செய்திருப்பதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரிலும் ஆட, அவர் ஆர்வமாக இருப்பது தெரிய வருகிறது.

மேலும், டி20 உலகக் கோப்பை 2028 தொடரிலும் ஆடும் முடிவில் அவர் இருக்கிறார். இதனால்தான், இனி உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாட முடிவு செய்துள்ளார்.

பிசிசிஐ ஏற்காது? புவனேஷ்வர் குமாருக்கு, தற்போது 36 வயதாகிறது. ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டி20 பார்மெட்டில் அபாரமாக செயல்படுகிறார்கள். மேலும், பிரின்ஸ் யாதவ், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா போன்றவர்களும் இருக்கிறார்கள். குர்நூர் பிராரும், பேக்கப்பிற்கு இருக்கிறார். இப்படி, போட்டிகள் கடுமையாக இருப்பதால், இனி புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு ஏன் ? தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான தொடர், மிகவும் நீண்ட தொடர் என்பதால்தான், தற்போது புவிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவை முக்கியமானது என்பதால்தான், டி20 தொடரில் முக்கியமான பௌலர்களை ஆட வைக்காமல் இருக்க, புவனேஷ்வர் குமாரை கூடுதலாக சேர்த்திருப்பதாக கருதப்படுகிறது.

புவிக்கு கடைசி வாய்ப்பு: தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்தான், புவனேஷ்வர் குமாருக்கு கடைசி வாய்ப்பு. முதல் மூன்று போட்டிகளிலும் புவனேஷ்வர் குமார் சொதப்பியிருக்கும் நிலையில், கடைசி 2 போட்டிகளில் அவர் அபாரமாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒருவேளை, கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் சொதப்பும் பட்சத்தில், அது புவிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link