IND vs ZIM 1st T20 – வரலாற்றில் 3ஆவது இந்திய பௌலர்: மயங்க் யாதவ் மெகா சாதனை: அபார பந்துவீச்சு – mayank yadav took first ball wicket vs zimbabwe t20 match and created history

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், ஓபனர் பிரேயன் பென்னட், கோல்டன் டக் ஆனார். மயங்க் யாதவ் வீசிய அதிவேக பந்தை அடிக்க முற்பட்டபோது, பென்னெட், கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டார்.

அடுத்து, பென் கரண் 8 பந்தில் 10 ரன்னை எடுத்து அவுட் ஆக, ஒன்டவுன் பேட்டர் டியோன் மைர்ஸ் 14 பந்தில் 6 ரன்னை சேர்த்து நடையைக் கட்டினார். தொடர்ச்சியாக, கேப்டன் சிகந்தர் ராசாவும் 4 (7) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படி, ஜிம்பாப்வே அணி, முதல் 8 ஓவர்களில் 32 ரன்களை மட்டும் எடுத்து 4 விக்கெட்களை இழந்ததால், ஜிம்பாப்வே அணி 70 ரன்னை தாண்டுவதே பெரிய விஷயம் எனக் கருதப்பட்டது.

இந்நிலையில், அதன்பிறகு ரியான் பர்ல், மத்வேரே, மருமணி ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ரியான் பர்ல் 35 பந்தில் 26 ரன்களை அடித்த நிலையில், மத்வேரே 34 பந்தில் 39 ரன்களை குவித்து அசத்தினார். பிறகு, மருமணி கடைசிவரை களத்தில் இருந்து, 20 பந்தில் 27 ரன்களை எடுத்தார்.

இப்படி, கடைசி நேரத்தில், ஜிம்பாப்வே பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டதால், அந்த அணி, 20 ஓவர்களில் 125/7 ரன்களை எடுத்தது.

மயங்க் அகர்வால், 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ், 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்களை சாய்த்தார். ஷிவம் துபே, 4 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். அசோக் சர்மா, 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.

மயங்க் யாதவ் சாதனை : இப்போட்டியில், முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த மயங்க் யாதவ், வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்குமுன், 2024ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், அர்ஷ்தீப் சிங், அமெரிக்க அணிக்கு எதிராக முதல் பந்தில் விக்கெட்டை எடுத்த நிலையில், 2025ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில், ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் பந்தில் விக்கெட்டை எடுத்திருந்தார். தற்போது, இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக மயங்க் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

Source link