IND vs ZIM 2nd T20 – இந்திய அணி அபார வெற்றி: பந்துவீச்சில் மாஸ் காட்டிய அபிஷேக் சர்மா: ஸ்கோர் விபரம் – india team beat zimbabwe team by 90 runs in 2nd t20

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி, அதே ஹராரே மைதானத்தில் துவங்கியது.

இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வைபவ் சூர்யவன்ஷி 9 பந்தில் 20 ரன்களையும், அபிஷேக் சர்மா, 8 பந்தில் 8 ரன்களையும் அடித்து அவுட் ஆனார்கள்.

இதனைத் தொடர்ந்து, இஷான் கிஷன் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு, 44 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 81 ரன்களை அடித்த நிலையில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 20 பந்தில் 4 பவுண்டரிகள் உட்பட 25 ரன்களை மட்டுமே எடுத்தார்.

பிறகு, இறுதிக் கட்டத்தில் திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு, 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 60 ரன்களை குவித்தார். மேலும், ரிங்கு சிங் 12 (8), ஷிவம் துபே 6 (3) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள். இதனால், இந்திய அணி, 20 ஓவர்களில் 219/5 ரன்களை குவித்து அசத்தியது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், ஓபனர் பிரையன் பென்னட் சிறப்பாக செயல்பட்டார். அவர், 19 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 32 ரன்களை அடித்தார். மற்ற எந்த பேட்டரும் 30+ ரன்களை அடிக்கவில்லை. ரியான் பர்ல் 18 பந்தில் 20 ரன்களையும், மருமணி 19 பந்தில் 24 ரன்களையும் சேர்த்தார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா, 3 பந்தை எதிர்கொண்டு டக்அவுட் ஆனார். இறுதியில், ஜிம்பாப்வே அணி, 17.5 ஓவர்கள் முடிவில் 129/10 ரன்களை மட்டும் எடுத்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

பிரின்ஸ் யாதவ் 1.2 ஓவர்களில் 10 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்த நிலையில், யாஷ் தாகூர், 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.

பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அபிஷேக் சர்மா, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு, 2.5 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில், வென்று, இந்திய அணி இத்தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டி, நாளை நடைபெறும்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், ஐசிசி டி20 தரவரிசையில், இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பிரின்ஸ் யாதவுக்கு காயம்: இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பிரின்ஸ் யாதவ், தசை பிடிப்பு பிரச்சினை காரணமாக பாதியில் விலகினார். இப்படி, பிரின்ஸ் யாதவ் விலகியதால், அந்த ஓவரின் கடைசி 4 பந்துகளை ஷிவம் துபேதான் வீசினார். அடுத்த போட்டியில், பிரின்ஸ் யாதவ் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Source link