IND vs ZIM 2nd T20 – டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி: இந்திய அணியில் ஒரு மாற்றம்: கேப்டன்கள் பேட்டி இதோ – zimbabwe opt to bowl first vs india team in 2nd t20i

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்றப் பிறகு பேசிய சிக்கந்தர் ராசா, ‘‘ முதலில் பந்துவீச விரும்புகிறோம். கடந்த போட்டியில், பிட்ச் துவக்கத்தில் பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. பிறகு, பேட்டர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இதனால்தான், முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். கடந்த போட்டிக்கான பௌலிங் பிட்சைவிட, தற்போதைய பௌலிங் பிட்ச் சற்று மாற்றமாக இருக்கிறது. இருப்பினும், ஹராரேவில், எப்போதுமே முதலில் பந்துவீசும்போது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எங்கள் அணி பௌலர்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘‘நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும், முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்திருப்போம். கடந்த போட்டிக்கான பௌலிங் பிட்சிற்கும், தற்போதைய போட்டிக்கான பௌலிங் பிட்சிற்கும் பெரிய மாற்றம் இருப்பதுபோல் தெரியவில்லை. பவுன்ஸ், கணிக்க கூடிய வகையில்தான் இருக்கும் என நம்புகிறேன். இதனால்தான், முதலில் பேட்டிங் ஆடுவது சரியாக இருக்கும் எனக் கூறினேன்’’

‘‘முதல் போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதால், இரண்டாவது போட்டியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எடுத்துக்கொள்ளவும் கூடாது. இதனை வீரர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டேன். கடந்த போட்டியின் நினைப்பிலேயே விளையாட கூடாது எனத் தெரிவித்துள்ளேன். இன்று ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசோக் ஷர்மாவுக்கு மாற்றாக, யாஷ் தாகூர் இன்று விளையாடுவார்’’ என்றார்.

இந்திய அணி பிளேயிங் 11 – வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர், மயங்க் யாதவ்.

ஜிம்பாப்வே அணி பிளேயிங் 11 – பிரையன் பென்னெட், பென் கரண், டியோன் மெய்ர்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், மத்வேரே, மருமணி, பிராட் எவின்ஸ், நியூமேன், ரிச்சர்ட் ங்கவரா, முசரம்பானி.

ஷ்ரேயஸ் ஐயர், இந்திய டி20 அணியில், இப்போட்டிக்கு முன்பு 8 போட்டிகளில் வழிநடத்தி, 8 போட்டிகளிலும் டாஸ் வென்று சாதனை படைத்தார். தற்போது, 9ஆவது போட்டியில், டாஸை வெல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Source link