IND vs ZIM T20 – எப்போது துவங்கும், எதில் பார்க்க முடியும்? புதிய சேனலில் ஒளிபரப்பு: நேரம், தேதி இதோ – india vs zimbabwe t20 series when and where to watch and squad details

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு பிறகு, இந்திய அணி, 7 டி20 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் கூட வெற்றியைப் பெறவில்லை.

அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள், அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் என எதிலும் இந்திய அணி வெற்றியைப் பெறாத நிலையில், அடுத்து, ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

ஜிம்பாப்வே டி20 தொடரில், இளம் வீரர்களுக்கு அதிகம முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. மாற்றாக, பிரப்சிம்ரன் சிங், யாஷ் தாகூர், அசோக் சர்மா, இடது கை ஸ்பின்னர் ஹர்ஷ் துபே ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

ஜிம்பாப்வே அணி, சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் வென்ற நிலையில், தற்போது இந்திய அணிக்கு எதிராகவும் அபாரமாக செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம், சமீபத்தில் அயர்லாந்து அணி, இந்தியாவை தோற்கடித்திருந்தது. இதனால், ஜிம்பாப்வேவும் அப்படி செய்யுமா அல்லது இந்திய டி20 அணி, அதிரடி கம்பேக்கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அட்டவணை என்ன? மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒரும் ஜூனை 23, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளும், ஹராரே மைதானத்தில், இந்திய நேரப்படி, மாலை 4:30 மணிக்கு துவங்கும்.

எதில் பார்க்க முடியும்: இத்தொடரை, சோனி நிறுவனமும், ஸ்டார் நிறுவனமும் ஒளிபரப்பு செய்யவில்லை. ஜீ தொலைக்காட்சியில், யூனிட்8 (Unite8) நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது.

ஆன்லைனில் பார்க்க: இத்தொடரை, பான்கோட் ஆப் மூலம், ஆன்லைனில் நேரலையில் பார்க்க முடியும்.

இந்திய அணி பட்டியல்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், ஷிவம் துபே, சூர்யான்ஸ் செட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங், ரவி பிஷ்னோய்.

ஜிம்பாப்வே அணி பட்டியல்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பென் கரண், பிராட் எவன்ஸ், க்ளைவ் மடன்டே, ம்போசா, மருமணி, வெல்லிங்டன் மசகட்சா, டசிங்கா, முசரம்பானி, டியோன் மைர்ஸ், ரிச்சர்ட் ங்கவரா, நியூமேன், மில்டன் ஷும்பா.

ஐசிசி டி20 தரவரிசையில், இந்திய அணி, 268 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணியும், 268 புள்ளிகளுடன்தான் இருக்கும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறது. ஜிம்பாப்வே அணி, 202 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் இருக்கிறது. இத்தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றியைப் பெறும் பட்சத்தில், 10ஆவது இடத்திற்கும் கூட முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

இதனால், இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில், ஜிம்பாப்வே அணி, வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணியும், தொடர்ச்சியாக 7 டி20 போட்டிகளில் வெற்றியைப் பெறவில்லை என்பதால், இத்தொடரில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link