ஐபிஎல் தொடர் மூலம், பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். சமீபத்தில், ஹர்ஷித் ராணா ஐபிஎலில் அபாரமாக பந்துவீசி, இந்திய அணியின் மூன்று பார்மெட்டிலும் இடம்பெற்றுள்ளார்.
இப்படி, ஐபிஎல் மூலம் பல திறமையான வீரர்கள், இந்திய அணிக்குள் வரும் நிலையில், தற்போது ஒரேயொரு ஐபிஎல் அணியில் இருந்து மட்டும் அடுத்தடுத்து 7 வீரர்களை, பிசிசிஐ புறக்கணித்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அந்த அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். அந்த அணியில் இருந்து, தொடர்ச்சியாக 7 வீரர்களை அடுத்தடுத்து புறக்கணித்துள்ளனர்.
1.யாஷஸ்வி ஜெய்ஷ்வால்: தற்போது, ஜெய்ஷ்வாலை டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாட வைத்து வருகிறார்கள். ஒருநாள் அணியில், தொடர்ச்சியாக பேக்கப் வீரராக இடம்பெற்று வந்த அவரை, நியூசிலாந்து ஒருநாள் தொடரில் புறக்கணித்துள்ளனர்.
2.வைபவ் சூர்யவன்ஷி: ஐபிஎல் 2026 சீசனில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷிக்கு, விரைவிலேயே இந்திய டி20 அணியில், பிளேயிங் 11-ல் இடம் கிடைத்தது. இந்நிலையில், சமீப காலமாகவே அவருக்கு பிளேயிங் 11-ல் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இனி, சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் ரெகுலர் ஓபனர்களாக இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
3.ரியான் பராக்கிற்கு இனி இடமில்லை? சமீப காலமாகவே, நமன் தீர் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி வருவதால், இனி ரியான் பராக்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது எனக் கருதப்படுகிறது.
4.துரூவ் ஜோரல் இடத்திற்கு போட்டி: இந்திய டெஸ்ட் அணியில், ரிஷப் பந்த் மெய்ண் கீப்பராகவும், துரூவ் ஜோரல் பேக்கப் கீப்பராகவும் இருந்தனர். இந்நிலையில், தற்போது இஷான் கிஷனையும், டெஸ்ட் அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால், ஜோரல் இடமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
5.ஜடேஜா இடம்: ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது டெஸ்டில் மட்டுமே இடம் கிடைக்கிறது. இவர், தற்போது முழு பார்மில் இல்லை என்பதால், ஒருநாள் பார்மெட்டில் சேர்க்க மறுக்கின்றனர். டெஸ்டிலும் கூட, ஜடேஜாவின் இடம் நிலையாக இல்லை.
6.ரவி பிஷ்னோய் புறக்கணிப்பு: ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், தொடர்ச்சியாக அபாரமாக செயல்படக் கூடியவர். டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் கூட பிடித்தார். ஆனால், திடீரென்று அவரை ஓரங்கட்டிவிட்டனர். தற்போது, குல்தீப் யாதவை மட்டுமே பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
7.துஷர் தேஷ்பண்டே: ஐபிஎல் 2023 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்ற வருடத்தில், அந்த அணிக்காக 21 விக்கெட்களை கைப்பற்றி, சிஎஸ்கேவின் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக இருந்தார். அதன்பிறகு, தேஷ்பண்டே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சென்ற நிலையில், தற்போது இந்திய ஏ அணியில் கூட இவரை சேர்ப்பதில்லை.
இப்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், திறமையான வீரர்கள் அடுத்தடுத்து இந்திய அணியின் வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, தற்போது யாஷஸ்வி ஜெய்ஷ்வால், டிரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார். அதேநேரத்தில், ஹர்திக் பாண்டியாவை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
