சமீபத்தில், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், எம்ஐ கேப்டவுன் அணி, கெய்ரன் பொல்லார்டை ஏலத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.
ஏலத்திற்கு வந்த பொல்லார்டை, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, 87.2 லட்சத்திற்கே, அதாவது அடிப்படை தொகைக்கே ஏலம் எடுத்தது. எம்ஐ கேப்டவுன் அணி, பொல்லார்டை வாங்க ஆர்வம் காட்டவே இல்லை.
இந்நிலையில், தற்போது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ள கெய்ரன் பொல்லார்ட், ‘‘என்னால், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஆட முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளதால், பணிச்சுமை காரணமாக ஆட இயாலது’’ என தெரிவித்துள்ளார். இதுதான், தற்போது பெரிய அளவில் சர்ச்சையாக மாறியுள்ளது.
என்ன காரணம்? தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷிம்ரோன் ஹெட்மையரைதான் டார்கெட் செய்து வைத்திருந்தது.
இதனை அறிந்த எம்ஐ கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்ஸுக்கு பொல்லார்ட் தலைமை பயிற்சியாளராக ஆகப் போகிறார் என்று தெரிந்துதான், பொல்லார்டை ஏலத்திற்கு அனுப்பியிருக்கிறது. ஹெட்மையரைவிட, பொல்லார்ட் ஆல்ரவுண்டர் திறமையை வைத்திருப்பதால்தான், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், பொல்லார்டை டார்கெட் செய்ய முடிவு செய்தது.
இதனால், ஏலத்திற்கு முதல் வீரராக வந்த ஹெட்மையரை, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஏலம் கேட்கவில்லை. அதேநேரத்தில், எம்ஐ கேப்டவுன் அணி, ஹெட்மையரை 87.2 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கே வாங்கிவிட்டது.
பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸுக்கு தலைமை பயிற்சியாளராக ஆகப் போகிறார் எனத் தெரியாமல், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், இவரை வாங்கிவிட்டது. இப்படி, பொல்லார்டும், எம்ஐ கேப்டவுன் அணியும், மும்பை இந்தியன்ஸும் சேர்ந்து, தற்போது ஜோபர்க் சூப்பர் கிங்ஸை ஏமாற்றி, ஹெட்மையரை எம்ஐ கேப்டவுன் அணி வாங்கிவிட்டது என்பதுதான், ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
மேலும், இது நன்கு திட்டமிடப்பட்ட மோசடி, இதனை கிரிக்கெட் சூதாட்ட புகார் கோணத்தில் விசாரிக்க வேண்டும் என ரசிகர்கள், கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது பொல்லார்டும் கிடைக்கவில்லை. ஹெட்மையரும் கிடைக்கவில்லை. ஹெட்மையரை தேர்வு செய்து வைத்திருந்ததை அறிந்து, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, என்ஐ கேப்டவுன் அணி காய் நகர்த்தியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்குபின், நிர்வாகிகளின் சூதாட்ட விளையாட்டு இருந்திருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில், இதுகுறித்து கெய்ரன் பொல்லார்டும், மும்பை இந்தியன்ஸும் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பொல்லார்ட் விலகாமல் விளையாடினால் பிரச்சினை இல்லை. ஒருவேளை, மும்பை இந்தியன்ஸுக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளேன். இதனால், என்னால் ஆட முடியாது என பொல்லார்ட் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டால், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், இதுகுறித்து புகார் அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால், பிரச்சினை இன்னமும் பெரியதாக மாறும்.
ஹெட்மையரை ஜோபர்க் அணி வாங்கிவிடக் கூடாது, எம்ஐ கேப்டவுன் அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற நோக்கில், மும்பை இந்தியன்ஸுக்கு தலைமை பயிற்சியாளராக ஆகப் போகிறோம் எனத் தெரிந்தும், பொல்லார்ட் திட்டமிட்டு தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்து, பிறகு விடுவித்தால், இது பெரிய குற்றமாகதான் பார்க்கப்படும். இதற்குள், இரு அணிகளின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் நிச்சயம் விசாரணை நடைபெறும்.
