IPL 2026 | அதிரடி ஆட்டத்தால் அசத்தல் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கவுகாத்தியில் நடைெபற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஐ.பி.எல். 2026 போட்டியில், வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த ஆட்டத்தில் ஏழு பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும்.

இடது கை தொடக்க ஆட்டக்காரரான இவர், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். முதல் ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்து சூர்யவன்ஷி ஆட்டத்தை தொடங்கினார். இரண்டாவது ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த போதிலும், சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

ஹேசில்வுட் பந்துவீச்சில் அடுத்தடுத்து வந்த நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் விளாசினார். ஐ.பி.எல். 2026 தொடரில் பார்சபாரா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து, சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

ஐ.பி.எல். தொடரில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி டாப் 5 இடங்களில் நுழைந்துள்ளார். இந்தப் பட்டியலில் 4 மற்றும் 5-ஆவது ிடத்தில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். பட்டியலின் முதல் மூன்று இடங்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்திலும், கே.எல். ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்து 2-ஆவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் யூசுஃப் பதான் இடம்பெற்றுள்ளார்.

இதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல். போட்டியின் ஒரு இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் சாதனையை சமன் செய்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருமுறை இப்படி அரைசதம் அடித்துள்ள நிலையில், மைக்கேல் லம்ப், பென் ஸ்டோக்ஸ் மற்றும் நிதிஷ் ரானா ஒருமுறை இப்படி செய்துள்ளனர்.

Source link