IPL 2026 | ஆஸ்திரேலிய வீரருக்குப் பதிலாக இங்கலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது SRH/ Payne replaces Edwards at Sunrisers Hyderabad for IPL 2026

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் எட்வர்ட்ஸ் (ஆல்-ரவுண்டர்) இடம் பிடித்திருந்தார். இவர் கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு மாற்றாக இங்கிலாந்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் பெய்ன் என்பவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இவருக்கு 35 வயது ஆகிறது. என்றாலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து ஒருநாள் அணியில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் ஆனார். ஆனால் காயம் காரணமாக தொடர்ந்து அவரால் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அதனால் டெஸ்ட் போட்டியை தவிர்த்தார். தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகளில் மடடும் விளையாடி வருகிறார்.

Source link