IPL 2026 | சி.எஸ்.கே.-வுக்காக சேப்பாக்கத்தில் முதல் போட்டி: 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்த சஞ்சு சாம்சன்/ IPL 2026 CSK vs PBKS Sanju samson agains once disappoint just 7 runs out

ஐபிஎல் 2026 சீசனில் 7-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே-வுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 5 ரன்கள் கிடைத்தன.

2-வது ஓவரை பார்ட்லெட் வீசினார். முதல் பந்தை கெய்க்வாட் பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். முதல் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கெதிராக 6 ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Source link