IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?

சிஎஸ்கே ceo காசிவிஸ்வநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

CSK  காசி விஸ்வநாதன்

19-வது ஐ.பி.எல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது.

இந்நிலையில் சிஎஸ்கே ceo காசிவிஸ்வநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

ருதுராஜ்
ருதுராஜ்

“சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் யார்? என்பதை எல்லாம் கேப்டன் ருதுராஜ் முடிவு செய்வார்.

அணியில் யார் யாருக்கு என்ன ரோல் என்பதை எல்லாம் ருதுராஜ் மற்றும் பிளெமிங் முடிவு செய்வார்கள்.

நாங்கள் ஏலத்தில் எடுத்த இளம் வீரர்கள் எல்லாம் நன்றாக விளையாடக் கூடியவர்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காசிவிஸ்வநாதன், “அதைப் பற்றி நான் இப்போது பேச முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

தோனி
தோனி

தவிர தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு, ” ஓய்வு குறித்து தோனி யாரிடமும் பேச மாட்டார். எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஓய்வு குறித்து பேசுவார்” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link