IPL 2026 | தோனி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். அவர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் நடப்பு தொடரில் சொந்த மண்ணில் முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் விக்கெட் கீப்பராக ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்.

கடந்த 2019-ல் பெங்களூரு அணிக்கு எதிராக தோனி எடுத்த 84 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை 115 ரன்கள் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் முறியடித்தார்.

Source link