IPL 2027 – டிரேடிங்கில் வெளியேறும் ரிஷப் பந்த், இஷான் கிஷன்: எந்தெந்த அணிக்கு செல்ல உள்ளனர்? – ishan kishan and rishabh pant chance to trade for ipl 2027

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன் போன்ற பெரிய பெரிய பெயர்கள் டிரேடிங் பேச்சு வார்த்தையில் அடிபடுவதால், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடில், மற்ற சீசனுக்கான டிரேடிங்கைவிட பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் பந்த் டிரேட்: லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக, ரிஷப் பந்த் வந்தப் பிறகும், அணி தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. இதனால், ரிஷப் பந்தின் கேப்டன் பதவியை பறிக்க, லக்னோ அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், அதிருப்தியில் இருக்கும் ரிஷப் பந்த், டிரேடிங்கில் வெளியேற விரும்புகிறாராம். ரிஷப் பந்திற்கு மாற்றாக நிகோலஸ் பூரனை கேப்டனாக நியமிக்க உள்ளனர்.

ரிஷப் பந்தை, டெல்லி கேபிடல்ஸுக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து குல்தீப் யாதவை பெற லக்னோ அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், பிரித்வி ஷாவையும் கேட்டு பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இஷான் கிஷன் டிரேடிங் : மறுபக்கம், இஷான் கிஷனை மீண்டும் அணிக்குள் கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, இதற்காக, டிரேடிங் கட்டணமாக 100 கோடி வரை கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம். முற்றிலும் பணம் கொடுத்து மட்டுமே, இஷான் கிஷனை வாங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இருப்பினும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பணத்திற்காக மட்டும் இஷான் கிஷனை விடுவிக்க சம்மதம் தெரிவிக்க மறுத்து வருகிறது. இஷான் கிஷனை அனுப்பிவிட்டு மாற்றாக ரியான் ரிகில்டன் மற்றும் ராபின் மின்ஸ் அல்லது மிட்செல் சாண்ட்னர் மற்றும் ராபின் மின்ஸ் ஆகியோரை வாங்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரையும் டிரேடிங்கில் அனுப்ப முடிவு செய்துள்ளனர். ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சூர்யகுமார் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் அனுப்ப வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் தனக்கு கேப்டன் பதவியை கொடுக்கவில்லை என்றால், என்னை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்பிவிடுங்கள் என திலக் வர்மா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து, திலக் வர்மாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்திருந்த நிலையில், ஜஸ்பரீத் பும்ரா கொடுத்த அழுத்தம் காரணமாக, பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான், அதிருப்தி காரணமாக, திலக் வர்மா மும்பை இந்தியன்ஸை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.

ஒருவேளை, திலக் வர்மாவை கேகேஆர் அணிக்கு அனுப்பினால், அந்த அணியிடம் இருந்து மாற்றாக அங்கிரிஸ் ரகுவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் கேட்டு பெறும் எனக் கருதப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ஆயுஷ் மாத்ரேவை கேட்டு வருகிறது. ஆனால், ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க முடியாது என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துவிட்டதால், பேச்சு வார்த்தை இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Source link