IPL 2027 – டிரேடிங்கில் 20 கோடி வரை பெற, பிசிசிஐ பகையை சம்பாதிக்கும் ஹர்திக் பாண்டியா: கம்பீர் அதிருப்தி – hardik pandya want to increase trade amount ahead ipl 2027 bcci unhappy

மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2027 சீசனின் டிரேடிங்கில் வெளியேற தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

ஹர்திக் பாண்டியா, டிரேடிங்கில் கிடைப்பதால், அவரை வாங்க அணிகள் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதாலும், அவரது வயது காரணமாகவும் அவரை, பெரிய தொகை கொடுத்து அல்லது பார்மில் இருக்கும் வீரர்களை மாற்றாக கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை வாங்க அணிகள் தயங்கி வருகிறது.

இந்நிலையில், தனது டிரேடிங் மதிப்பை, 20 கோடி வரை உயர்த்த தற்போது ஒரு முடிவை ஹர்திக் பாண்டியா எடுத்துள்ளார். அதாவது, ஐபிஎல் 2027 சீசன் வரை இனி எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் ஆடாமல், நேரடியாக ஐபிஎல் 2027 சீசனில்தான் ஆடுவேன் என ஹர்திக் பாண்டியா முடிவு செய்துள்ளார்.

அதாவது, முழு பிட்னஸை பெற்று, தீவிர பயிற்சியை மேற்கொண்டு, ஐபிஎல் 2027 சீசனுக்கு புத்துணர்ச்சியுடன் வருவேன் என ஹர்திக் முடிவு செய்துள்ளதால், தற்போது அவரது டிரேடிங் மதிப்பு, மீண்டும் உயர்ந்துள்ளது. இவரை வாங்க, மீண்டும் அணிகள் கடும் போட்டி போட ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை கொடுத்துவிட்டு, ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், ஹர்திக்கை, ராஜஸ்தான் ராயல்ஸ்தான் டிரேடிங்கில் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே போன்ற அணிகளும் டிரேடிங்கில் ஹர்திக்கை வாங்க முயற்சித்து வருகிறது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஜெய்ஷ்வாலை வாங்கத்தான், தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

கடும் அதிருப்தியில் பிசிசிஐ: இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இந்த முடிவால், பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம், ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸ், அந்த அளவுக்கு மோசமாக இல்லை என்பதால்தான். அவரது காயம், முழுவதுமாக குணமடைந்த 30-40 நாட்கள் வரைதான் ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர், உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர்களில் விளையாடியாக வேண்டும். மேலும், டிசம்பரில் இலங்கைக்கு எதிரான தொடரும் இருக்கிறது. ஆனால், இதில் எதிலும் பங்கேற்க முடியாது, நேரடியாக ஐபிஎலில் மட்டுமே ஆடுவேன் என ஹர்திக் உறுதியாக இருக்கிறார்.

பிசிசிஐ விதிமுறைப்படி, பிட்னஸுடன் இருக்கும் வீரர்கள், உள்ளூர் தொடர்களில் விளையாடுவது அவசியம். இதனால்தான், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் கூட விஜய் ஹசாரே டிராபி தொடரில், சமீப காலமாக விளையாடி வருகிறார்கள். தற்போது, ஹர்திக் பாண்டியா, நேரடியாக ஐபிஎலில்தான் ஆடுவேன் என அடம்பிடிக்கிறார்.

இவரை உதாரணமாக வைத்து, நாளை மேலும் சில வீரர்கள் இதேபோல் வீம்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியா முழு பிட்னஸை எட்டிய உடன், அவரிடம் பேசி, அவரை இலங்கைக்கு எதிராக தொடரிலும், சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, இத்தொடர்களில் விளையாட முடியாது என ஹர்திக் பாண்டியா மறுப்பு தெரிவித்தால், அதற்கு உரிய காரணத்தை பிசிசிஐயிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஹர்திக் பாண்டியா மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Source link