IPL 2027 – ஹர்திக்கை சிஎஸ்கேவுக்கு கொடுக்காமலே, ஆயுஷ் மாத்ரேவை வாங்க, MI போட்டுள்ள மெகா திட்டம் – mumbai indians chance to get ayush mhatre from csk without hardik pandya trading

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், ஹர்திக் பாண்டியா எந்த அணிக்கு செல்லப் போகிறார் என்பதுதான் பெரிய அளவில் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் பலத்த போட்டி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், முதலில் சிஎஸ்கேவிடம்தான் டிரேடிங் டீல் பேசியது. அப்போது, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஆயுஷ் மாத்ரேவை கேட்ட நிலையில், முடியாது என சிஎஸ்கே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், டிவோல்ட் பிரேவிஸை மாற்றாக தருகிறோம் என முன்பு சிஎஸ்கே தெரிவித்த நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவை பணம் கொடுத்துதான் வாங்க முடியும் எனத் தெரிவித்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கேகேஆர் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் பேசிய நிலையில், கேகேஆர் அணியும், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரை விடுவிக்க முன் வந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவோ, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை தொடர்புகொண்டு, ‘நான் சிஎஸ்கேவுக்கு செல்லதான் விரும்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, ஹர்திக்கை தொடர்புகொண்டு தோனி பேசியப் பிறகுதான், ஹர்திக் சிஎஸ்கேவுக்கு செல்ல உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அதிரடி முடிவு: இந்நிலையில், சிஎஸ்கேவுக்குதான் செல்வேன் என ஹர்திக் அடம்பிடித்த நிலையில், அவரை அழைத்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, கேப்டன் பதவியை தரும் அணிக்கு, உங்களை டிரேடிங் செய்கிறோம். எங்களால் இதனை மட்டுமே செய்ய முடியும் என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், ஹர்திக்கும் இதற்கு சம்மதம் தெரிவித்தாராம்.

இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீண்டும் பேச்சு வார்த்தையை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஹர்ஷித் ராணா, அங்கிரிஸ் ரகுவன்ஷி ஆகியோரை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்களாம்.

ஆயுஷ் மாத்ரேவையும்: மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவையும் வாங்க, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆயுஷ் மாத்ரேவை வாங்க, சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசாமல், நேரடியாக ஆயுஷ் மாத்ரேவிடம், பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுஷ் மாத்ரேவுக்கு, மும்பைதான் ஹோம் கிரோண்ட். இதனால், மும்பை வான்கடே மைதானத்தில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியும். இதனை அவரிடம் எடுத்துக் கூறி, மேலும், சில உதவிகளையும் செய்ய தயார் எனக் கூறி ஆயுஷ் மாத்ரேவிடம் பேசி வருகிறார்களாம்.

இப்படி, ஆயுஷ் மாத்ரேவை பணம் கொடுத்து மட்டும் வாங்க, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை, ஹர்திக்கை கேகேஆர் அணிக்கு டிரேடிங்கில் அனுப்பி ஹர்ஷித் ராணா, அங்கிரிஸ் ரகுவன்ஷியையும், சிஎஸ்கேவிடம் இருநுத ஆயுஷ் மாத்ரேவையும் வாங்கிவிட்டால், மும்பை இந்தியன்ஸ் அணி, அசுர பலத்தை பெறும்.

மேலும், சூர்யகுமார் யாதவையும் டிரேடிங்கில் அனுப்பி, தரமான இளம் வீரரை வாங்கினால், மும்பை இந்தியன்ஸ் அணி, மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி அதிரடி கம்பேக்கை கொடுக்க முடியும். இதனால், ஹர்திக் பாண்டியா டிரேடிங்கும், ஆயுஷ் மாத்ரேவை வாங்குவதும், மும்பை இந்தியன்ஸுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link