Iran War Updates | ஈரானின் கார்க் தீவு மீது கடும் தாக்குதல்..!

ஹார்முஸ் திறப்பு அல்லது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதிக்கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை ET (Eastern Time) நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவடைகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின் ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கார்க் தீவு பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வான்தாக்குதல் மூலம் கார்க் குறிவைக்கப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் சவுதி அரேபியால் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளதற்கு, எதிராக பாரசீக வளைகுடாவுக்கு எதிர்ப்பகுதியில் கார்க் தீவு அமைந்துள்ளது.

ஈரானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயில் செக்டராக உள்ளது. இதன் வழியாகத்தான் ஈரானின் 90 சதவீத ஆயில் ஏற்றுமதி நடக்கிறது.

ஏற்கனவே இந்த தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தீவை கட்டுப்பாட்டில் கொண்டு வர டிரம்ப் விருப்பம் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்கா ரெட் லைனை தாண்டினால், பிராந்தியத்தை தாண்டி பதிலடி கொடுப்போம் என ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பல ஆண்டுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை துண்டிப்போம் என்றார்.

Source link