தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் செயலாற்றி வருகிறார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பியூஸ் கோயல் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், முதல்வராக மாட்டார் என்ற பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார் பியூஸ் கோயல்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “உதயநிதி கருத்தால் தமிழகப் பண்பாடு புண்பட்டுள்ளது. வருங்காலத்தில் அவர் ஒருபோதும் தமிழ்நாட்டின் முதல்வராக மாட்டார். நடக்கவிருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிச்சயம். ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்” என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
