Kohli: "நாங்க அதிர்ஷ்டத்தால கோப்பையை வெல்லல, ஆனா பலர்.!" – ஆர்சிபி வெற்றி குறித்து கோலி

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வரலாற்று வெற்றி குறித்து ஆர்சிபி நிர்வாகம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

கோப்பையை வென்ற ஆர்சிபி

அதில் பேசியிருக்கும் விராட் கோலி, “உண்மையைச் சொல்லப்போனால், கடந்த முறை இறுதிப்போட்டிக்குச் சென்றபோது நாங்கள் மிகவும் தன்னமிக்கையாக இருந்தோம்.

அதேபோல எங்களுடைய எதிரணியினரும் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திவிட்டுதான் இறுதிபோட்டிக்கு வந்ததிருந்தனர்.

அதனால் அவர்களும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்தனர். பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்டது எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.

கடந்த முறை பதற்றத்தை கட்டுபடுத்தி நிதானத்துடன் விளையாடினோம். நாங்கள் அதிர்ஷ்டத்தால் தான் கோப்பையை வென்றோம் என்று பலர் விமர்சித்தனர்.

ஆர்சிபி - கோலி
ஆர்சிபி – கோலி

நாங்கள் சிறந்த அணிகளை வீழ்த்திவிட்டுத்தான் அந்த இடத்தை பிடித்தோம். இந்த வெற்றியைப் பெற நாங்கள் முழு தகுதியுடையவர்கள்” என்று கோலி பேசியிருக்கிறார்.

Source link