Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி… அசரவைத்த டிசைன்ஸ் – சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

”இந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட டிசைன்கள் அனைத்தும் இந்த ஷோவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை”

Leather Fashion Show 2026

சென்னையின் தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய லெதர் ஃபேஷன் நிகழ்வான ‘லெதர் ஃபேஷன் ஷோ 26’, வண்ணமயமான கலை நிகழ்ச்சியாக அரங்கேறியது. இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் (IILF) ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்ற இந்த விழா, உலகத் தரத்திலான லெதர் தயாரிப்புகளை மேடையில் அணிவகுக்கச் செய்தது.

டிரெண்டுகளைத் தீர்மானிக்கும் மேடை

இந்த ஆண்டு ஃபேஷன் ஷோவில் இந்தியா முழுவதிலுமிருந்து 13 முன்னணி நிறுவனங்கள் தங்களின் லெதர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின.

Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி... அசரவைத்த டிசைன்ஸ் - சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

வெறும் பேக் (Bags), ஷூக்கள் (Footwear) என்று மட்டும் சுருங்கிவிடாமல், லெதர் கார்மென்ட்ஸ் மற்றும் அக்சஸரீஸ்களில் சர்வதேச அளவில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை இந்த மேடை பறைசாற்றியது. குறிப்பாக, சுற்றுச்சூழல் விதிகளுக்கு (LWG protocols) உட்பட்டு தயாரிக்கப்பட்ட நேச்சுரல் லெதர் தயாரிப்புகள் இந்த முறை அதிகக் கவனத்தைப் பெற்றன.

மேடையை அதிரவைத்த 14 ஷோஸ்டாப்பர்ஸ்

பிரபல இயக்குநர் பாஸ்கரன் சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்த விழாவிற்கு, ஜூட் பெலிக்ஸ் (Jude Felix) நடன அமைப்பு செய்திருந்தார். சுமார் 70 மாடல்கள் மற்றும் 14 ஷோஸ்டாப்பர்ஸ் மேடையில் தோன்றி லெதர் ஆடைகளில் மெருகேற்றினர்.

குழந்தைகளும் மாடலிங்கில் பங்கேற்று அசத்தியது விழாவின் ஹைலைட்.

Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி... அசரவைத்த டிசைன்ஸ் - சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

ஃபேஷன் ஷோவின் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.விஜயன் பேசுகையில், “ஆசியாவின் மிகப்பெரிய ஈவென்ட் இது. இதை நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட டிசைன்கள் அனைத்தும் இந்த ஷோவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை” எனக் குறிப்பிட்டார்.

உலகத் தரம்… உள்ளூர் ஆதரவு

இயக்குநர் பாஸ்கரன் சந்திரசேகர், “ஒவ்வொரு முறையும் புதிய கண்டுபிடிப்புகளுடன் இந்த விழாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படங்களுக்கு….

இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (IFLMEA) முன்னெடுத்த இந்த பிரமாண்ட நிகழ்விற்கு, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் (பிளாட்டினம்), சபா குரூப் (கோல்டு) மற்றும் மைக்ரோபாக் (சில்வர்) ஆகிய நிறுவனங்கள் முக்கிய ஆதரவை வழங்கியிருந்தன.

Source link