விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் “LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.
‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே பாலாஜி, “எனக்கும், அனிருத்துக்கும் இந்த ‘LIK’ படத்துடன் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடல் இருக்கும். ‘AAKKO’ ஆல்பம் பாடலில் இருந்து அந்தப் பாடலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
‘AAKKO’ படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது, அவரும், நானும் நடிப்பதற்காக அவசர அவசரமாக முடியெல்லாம் வெட்டிவிட்டோம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எங்களைப் பார்த்துவிட்டு 2 லட்ச ரூபாய்க்கு செக்கெல்லாம் எழுதிக்கொடுத்தார்.
