ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு- கேது மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியன. அதில் கேது தற்பொழுது சிம்ம ராசியில் சிரஞ்சாரம் செய்து வருகின்றார். இவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி கேது அதிபதியாக கொண்ட மகம் நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். நவகிரகங்களில் கேது ஒரு மர்மமான மற்றும் ஆன்மீக தன்மை கொண்ட கிரகமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சில ராசிகளுக்கு தங்களுடைய தொழில் மற்றும் நிதிநிலை தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும்.
பஞ்சாங்கத்தின் படி கேது பகவான் ஆகஸ்ட் 2ஆம் தேதி சிம்ம ராசியில் உள்ள, அவர் ஆளக்கூடிய மகம் நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சில ராசிகளுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு, தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நாங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கேதுவின் இந்தப் பெயர்ச்சியால் எந்த 5 ராசிக்காரர்களுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி
கேதுவின் இந்த சஞ்சாரம் மேஷ ராசியினருக்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும். குடும்பத்தில் நல்ல செய்திகள் நடக்கும். நீங்கள் என்ன செய்த முதலீடுகள் மூலம் லாபங்களை பெறுவீர்கள்.
நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பணிகள் வேகம் பெறலாம். பணியில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளோ அல்லது பதவி உயர்வோ கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்களும் லாபகரமான ஒப்பந்தங்களும் கிடைக்கலாம். முதலீடுகள் நல்ல பலனைத் தரக்கூடும். அத்துடன் ஆன்மீக நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வமும் அதிகரிக்கலாம். முக்கிய நிதி சார்ந்த முடிவுகளை நன்கு ஆலோசித்த பிறகு எடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
சிம்மம் ராசி
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் கேது, மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி கிடைப்பதும், புதிய வாய்ப்புகள் உருவாகாஅம் நீண்ட நாட்களாக பதவி, சம்பள உயர்வுக்கான காத்திருப்பு நிறைவேற வாய்ப்பு உண்டு. வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் ஒப்பந்தங்கள் பெறவும், சிலரின் கூட்டாண்மை கிடைக்கும். புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் உங்களுடைய பேச்சு, செயல்பாடுகளுக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினரிடமிருந்தும் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி
விருச்சிக ராசியினருக்கு இக்காலம் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். உங்கள் பணியில் புதிய தொடக்கங்கள் ஏற்படலாம் மற்றும் வேலை மாற்றத்திற்கான முயற்சிகள் வெற்றிபெறலாம். புதிய வணிக ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கான அறிகுறிகள் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாக்கிகள் அல்லது சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் மற்றும் உங்கள் இணையரின் ஆதரவு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசியினரைப் பொறுத்தவரை, கேதுவின் இந்த இடப்பெயர்ச்சி தொழில் மற்றும் நிதி விவகாரங்களுக்குச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பணியிடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் வெற்றிபெறலாம். உங்கள் நிதி நிலை வலுவடையும்; சேமிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும்; மேலும் ஆன்மீக அல்லது புனிதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
மீனம் ராசி
மீன ராசிக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது பெரியளவில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். உங்கள் பணிகளில் புதிய மைல்கற்களை எட்டுவீர்கள். வேலைக்கான நேர்காணல்கள் அல்லது போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறலாம். செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவு எடுப்பதில் கவனம், நிதானம் தேவை.
குறிப்பு:
இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இத்தகவல்களைக் கருத்தில் கொள்ளவும் முழுமையான விவரங்களைப் பெறவும் தகுந்த நிபுணரை அணுகுவது நல்லது.
