ஒருவருக்கு ஆற்றல், வேகம், ஒரு செயலை செய்து முடிப்பதற்காக உத்வேகம் தரக்கூடியவர் செவ்வாய் பகவான். அவர் வரும் நவம்பர் 12ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். நீச நிலையிலிருந்து, நட்பு ராசியான சிம்ம ராசியின் நுழைய உள்ளார். அவருடைய சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்கள் தரும் என தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிரகம் ஒரு நபருக்கு தைரியம், வலிமை, தொழில் முன்னேற்றம், மனை, நிலம் போன்ற விஷயங்களுக்கான கிரகமாக குறிப்பிடப்படுகிறார். இவர் தற்போது நீச நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார். தீபாவளி முடிந்த பின்னர் நவம்பர் 12ஆம் தேதி, கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இரவு 8:20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்திற்கு நட்பு ராசியான சிம்மத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சில ராசிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிதி செழிப்பும் பெருகும்.
கடக ராசி
கடக ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் செவ்வாயின் பெயர்ச்சி நடக்கிறது. இந்த காலத்தில் உங்களுடைய தொழில் தொடர்பாக நீங்கள் மேற்கண்ட கூடிய முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் போன்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கும்.
வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய நபர்களின் தொடர்பு கொள்ள லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலத்தில் நன்மைகள் நடக்கும் என்றாலும் உங்களுடைய நிதி சார்ந்த விஷயங்களில் அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். சிந்தனையுடன் செயல்பட வேண்டிய காலம்.
துலாம் ராசி
துலாம் சேர்ந்தவர்களுக்கு லாபஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் நகர்வு தொடங்க உள்ளது. இந்த காலத்தில் உங்களுக்கு பணம் தொடர்பான விஷயங்களில் அதை பெருக்குவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும்.
தொழில் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் ஏற்க முடியும். இந்த காலத்தில் உங்களுடைய தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், நிபுணர்களின் ஆலோசனையின் படி வருமானத்தை சேமிக்க அல்லது நல்லது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். நிதி நிலைத் தன்மையுடன் இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி இருந்தவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பார்வை உங்கள் மீது விழுவதோடு, உங்கள் ராசிநாதனாகவும் அவர் இருப்பதால் பல்வேறு விதத்தில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நிதி விவகாரங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. உங்களுடைய வருமானம் அதிகரிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் நீங்கள் தேவையற்ற செயல்களை கவனமாக குறைக்கும் முயற்சி செய்யவும். பணியிடத்தில் உங்களுடைய கடின உழைப்பிற்கான பலன்களை பெறுவீர்கள். தொழில் தொடர்பான முதலீடுகளில் நிதானமான முடிவு எடுக்கவும். பொறுப்புகளையும், குடும்ப தேவைகளையும் கவனமாக செய்யவும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் அவர் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுடைய தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை பெறுவதோடு, உங்களுடைய திறமையை நிருபிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். நீங்கள் கூட்டணி வைத்து செய்யும் செயல்கள், உங்களுடைய ஒப்பந்தங்கள், பண பரிவர்த்தனை விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.
உங்கள் செயல்களில் வேகம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக எந்த ஒரு செயலையும் கேட்டு செய்வதோடு, அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண பொறுமையும் தேவைப்படும்.
மீன ராசி
மீன ராசி அன்பர்களுக்கு உங்களுடைய ராசிக்கு செவ்வாயின் அமைப்பு நன்மைகள் அதிகம் தரும். உங்களுடைய தொழில் தொடருமான முயற்சிகள் வெற்றி அடைவதோடு, நீங்கள் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். இந்த நீண்ட காலமாக தடைபட்டு வந்த பணிகள் செய்து முடிக்க முடியும். வணிகம் தொடர்பாக புதிய உத்திகளை கையாள்வதும், சூழலுக்கு ஏற்ப உங்களை தகவல் வைத்துக் கொள்வது, முடிவுகளில் சிறிய மாற்றங்கள் செய்வது நன்மை தரும். நிதி நிலையை வலுப்படுத்தும் விதத்தில் நீங்கள் செய்ய நினைக்கும் முதலீடு திட்டங்களில் அவசரப்பட வேண்டாம்.
சரியான ஆராய்ச்சி மற்றும் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையின் படி செயல்படுவது நன்மை தரும். வேலை, தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைய முறையான திட்டமிடலும், விவேகமாக நீங்கள் இருக்கக்கூடிய முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்த நிதி இலக்கை அடைய உதவும்.
