Mercury Direct Saturn Retrograde Benefits,சனி வக்கிர பெயர்ச்சி, புதன் வக்கிர நிவர்த்தி: எந்த ராசிகளுக்கு சாதகமான தர வாய்ப்பு உண்டு? – saturn retrograde and mercury turns direct: astrological effects on the 12 zodiac signs

ஜூலை மாத இறுதியில் புதன் தன்னுடைய சொந்த ராசியில் ஜூலை 24 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அதே போல சனி பகவான் மீன ராசியில் ஜூலை 27 வக்கிர நிலையை தொடங்க உள்ளார். டிசம்பர் 11 வரை சனி இந்த வக்கிர நிலையில் சஞ்சரிப்பார். ஜோதிடத்தில் இந்த அரிதான நிகழ்வுகளால் சில ராசிகளுக்கு சாதகமற்ற பலன்கள் கிடைத்தாலும், சிலருக்கு மிகவும் அற்புதமான காலமாக மாறும். அந்த விதத்தில் எந்தெந்த ராசிகளுக்கு இந்த கிரக மாற்றம் நன்மைகளை தரும் என தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கிரகங்களின் நகர்வுகள் ஒரு இயற்கையான நிகழ்வுகள் ஆகும். அதே சமயம் எந்த இடத்தில் கிரகங்களின் நகர்வு நடக்கிறது? அந்த கிரகம் சந்திக்க கூடிய இடம், பார்வை மற்றும் கிரகங்களுடன் ஏதேனும் சேர்ந்துள்ளனவா உள்ளிட்ட விஷயங்கள் சில ராசிகளுக்கு சுப பலனும் அல்லது சாதகமற்ற பலன்களோ கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அந்த விதத்தில் சனி வக்ர பெயர்ச்சி மற்றும் புதன் வக்கிர நிவர்த்தி எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் வெற்றியும் செல்வத்தையும் தரும் என தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களுக்கு, உங்கள் ராசி அதிபதியான புதன் பகவான் வக்கிர நிலையில் இருந்து நேர்கதிக்கு (direct motion) ஜூலை 24ம் தேதி நகர தொடங்க உள்ளார். தனது சொந்த ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் புதன் பகவான் உங்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அவர்களை சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் அதில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும், உங்களுக்கு வரவேண்டிய பணமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நிதி நிலைமை மேன்மை அடையும். புதிய வழியில் உங்களுக்கு வருமானம் கிடைக்கலாம். கடந்த காலம் முதலீடுகளில் இருந்து உங்களுக்கு நல்ல லாபத்தை பெற வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு புதன் பகவானின் வக்ர நிவர்த்தி மற்றும் சனியின் வக்கிர நிலையானது உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். புதன் வக்ர நிவர்த்தி அடையும் போது உங்களுக்கு நேர்மறையான பலன்கள் அதிகமாக கிடைக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் என்பதால் சரியான விகிதத்தில் அதை சேமிக்க முயற்சி செய்யவும்.

தொழில் தொடர்பாக சில முக்கிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். நீண்ட கால குடும்பப் பிரச்சினைகள் தீரும். அதனால் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும். சனியின் வக்ர நிலை காரணமாக அஷ்டம சனி நடக்கும் இந்த காலத்தில் உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு புதன் அஷ்டமஸ்தானத்தில் மக்கள் நிவர்த்தி அடைந்து நேர் கதியில் பயணிக்க உள்ளார். புதனின் இந்த மாற்றம் உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். திடீர் பண வரவுகள் மற்றும் எதிர்பாராத வெற்றிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலை விரிவாக்கும் திட்டங்கள் நல்ல வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தையும் உங்களுக்கான பொறுப்புகள் நிறைவேறுவதுடன், பணி சுமை சற்று குறைவதால் மன நிம்மதி அடைவீர்கள். நிலம் அல்லது வாகனம் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான சிக்கல்கள் விளக்கும். அதில் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
குறிப்பு:

இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இது குறித்து எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு முழுமையான விவரங்களைப் பெற, தொடர்புடைய நிபுணரை அணுகுவது நல்லது.

Source link