Mercury Rise November 2026,நவம்பர் 11 முதல் புதன் உதயம்: தொடங்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள் – mercury rises on november 11, 2026: zodiac signs that may see progress in their endeavours

சூரியன் தற்பொழுது துலாம் ராசியில் நுழைந்துள்ள நிலையில், புதன் அஸ்தமன நிலை அடைய உள்ளார். இவர் தீபாவளிக்கு பிறகு நவம்பர் 11ஆம் தேதி மீண்டும் உதயமாக உள்ளார். புதனின் உதயநிலை ராசிகள் செய்யக்கூடிய தொழில், வேலை, கல்வி தொடர்பான முன்னேற்றத்தையும், குடும்ப சூழல் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். பொன்னான காலமாக அமையப்போகும் ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு, வாக்குத்திறன், தொழில்நுட்பம், நுண்ணறிவு வீட்டு விஷயங்களை தரக்கூடியவர். சூரியன் அருகில் இருக்கக்கூடிய புதன் காரணமாக தற்போதுள்ள அஸ்தமன நிலை புதனின் அருள் குறைவாக கிடைக்கும். இந்த இரண்டு கிரகங்களும் சற்று விலகும் போது இவர் துலாம் ராசியில் நவம்பர் 11ஆம் தேதி மீண்டும் உதயமாக உள்ளார். புதனின் தாக்கம் சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலையை அருளக்கூடியதாக இருக்கும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு புதன் இந்த உதய நிலை, உங்களுடைய பணிகள் சரியாக முடிக்கவும், நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் லாபமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுடைய தகவல் தொடர்பு திறன் மற்றும் அனுபவத்தின் மூலம் முன்னேற்றத்தை அடைய முயற்சி செய்யலாம். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் உங்களுடைய இலக்கை அடைந்து வெகுமானம் பெறுவீர்கள். நீண்ட கால இலக்குகளை மனதில் கொண்டு செயல்படுவதன் மூலம் அதில் முன்னேற்ற நிலையை நீங்கள் காண முடியும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் உதயம் அடைய உள்ளதால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். உங்களுடைய பேச்சு மற்றும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்த சாதகமான காலமாக அமையும். தொழில் முனைவோருக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். முதலீடு சார்ந்த ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி விஷயங்களில் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்காமல் கவனத்துடன் செயல்படவும்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசி அதிபதியின் உதய நிலை உங்கள் தன ஸ்தானத்தில் அமைவதால் உங்களுடைய வேலை தொடர்பாக தெளிவான சிந்தனையும், திட்டங்களை செயல்படுத்துவதில் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் அதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும். உங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் கவனத்தில் இருக்க முடியும்.

​தொழில் முனைவோர் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் வணிகத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் ஈடுபடுவது நன்மை தரும். நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் அடைய செலவுகளை கட்டுப்படுத்துவது, சேமிப்பிற்கான திட்டங்களில் ஈடுபடுவது நன்மை தரும்.

மகர ராசி

மகர ராசி அன்பர்களுக்கு தொழில் முன்னேற்றம் அடைய உங்களுடைய ஒழுக்கம் மற்றும் சிறப்பான செயல் திறன் உதவும். மேலும் திட்டமிட்ட அணுகுமுறைக்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகள் மற்றும் சாக ஊழியர்களுடன் நல்லுறவை பேணுவதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த வேலையை சரியாக முடிக்கவும், பணி முன்னேற்றமும் பெற வாய்ப்புகள் உண்டு. நிதி விஷயங்களில் உங்கள் பட்ஜெட் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதே சமயம் அதிகம் அபாயம் கொண்ட முதலீடுகள் செய்வது மற்றும் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

கும்ப ராசி

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு புதனின் உதய நிலை உங்களுடைய தொழில் திட்டங்கள் முன்னேற்றம் அடைவதோடு, புதிய தொடர்புகள் மற்றும் முழு பணிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடிய காலமாக இருக்கும். வேலை மாற்றத்தை விரும்புபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலவில் இருக்கக்கூடிய முக்கிய பணிகளை முடிக்க வாய்ப்புகள் அமையும். உங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கான சூழலும், அதற்கான முயற்சிகளும் வெற்றி தரும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பீர்கள்.

Source link