Mercury Turns Direct 2026,புதன் வக்ர நிவர்த்தி (ஜூலை 25, 2026): 5 ராசிகளுக்கு தொழில், நிதி மற்றும் உறவுகளில் ஏற்படும் சாதகமான ஜோதிட பலன்கள் – mercury turns direct on 25 july 2026: career, financial, and relationship outlook for 5 zodiac signs

புதன் பகவான் தற்பொழுது மிதுன ராசியில் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இவர் வரும் 25ம் தேதி வக்ர நிலையிலிருந்து நிவர்த்தி அடைகின்றார். ஏற்கனவே இங்கு ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால், இவரின் வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு பணி உயர்வு, எதிர்பார்த்த முன்னேற்றம், வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். இதோ அந்த அதிர்ஷ்டமான ராசிகள்.

ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன் பகவான் மிதுனத்தில் தற்பொழுது வக்ர நிலையில் உள்ளார். இவர் ஜூலை 24, அதிகாலை 3.54 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் நகரத் தொடங்குகிறார். புதனின் அந்த மாற்றம் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகளையும், தொழில் வியாபாரத்தில் லாபத்தையும், கல்வி தொடர்பான துறையில் முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த புதன் வக்ர நிவர்த்தி காரணம் ஆக்க சுப பலன்களை அதிகரிக்கும். உங்களுடைய மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தொழில்நுட்பத்துறை, ஊடகம், சந்தைபடுத்துதல், தகவல் தொடர்பு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகளிலும், தனிப்பட்ட காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழலை எதிர்பார்க்கலாம். உங்களுடைய உறவுகளில் நல்ல மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். பேச்சில் இனிமை இருக்கும். இது உங்கள் உறவுகளை பிணைப்பு உருவாகும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதும், வாக்குவாதங்களை தவிர்ப்பதும் அவசியம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, உங்களுடைய ராசி அதிபதியான புதன் லக்னத்தில் சஞ்சரிப்பது உங்கள் குடும்ப வாழ்க்கைக்கும், செயல்பாடுகளிலும் இனிமையான சூழலை தரும். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, உங்கள் ஆளுமைத் திறன் வேலைகளை முடிக்கவும் உதவும்.வேலை மீதான ஆர்வம் அதிகரிக்கும். இந்த காலத்தில் நிதி நிலைமை முன்னேற்றம் அடைவதோடு, சுக போகங்கள் மற்றும் ஆடம்பர விஷயங்களில் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். கூடுதலாக, நீங்கள் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

சிம்ம ராசி

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, புதன் வக்ர நிவர்த்தி நிதி நிலை ரீதியாக மிகவும் சாதகமானதாக அமையும். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்கும் திட்டங்கள், யோசனைகளில் இருப்பீர்கள். புத்திசாலித்தனமான செயல்பாடு உங்களுக்கு லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். முடங்கிக்கிடந்த பணத்தை மீட்டெடுக்க முடியும். இந்த காலத்தில் உங்களுக்கு தனவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் அந்த பணத்தை சரியாக சேமிக்கும் முயற்சியில் ஈடுபடவும். பல்வேறு வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, உஙள் ராசி அதிபதி புதனின் தொழில் ஸ்தான வக்ர நிவர்த்தியானது, உங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளையும், வேலை, தொழிலில் சிறப்பாக செயல்படவும், அதன் மூலம் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். உங்களுடைய முந்தைய முதலீடுகள் கணிசமான லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். உன்க்கள் வணிக திட்டங்களில் போட்டிகளை சமாளிக்க முடியும். உங்கள் பேச்சு திறன், தொடர்பு திறன் பாராட்டை பெற்றுத் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அஷ்டம ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தில் ஆளக்கூடியவர். இவர் அஷ்டம ஸ்தனாத்தில் நேர்கதியை அடையும் புதன் உங்கள் வணிக உறவுகளையும், வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தும். நிலுவையிலுள்ள பணிகளை சரியாக முடிக்க முடியும். புதிய வேலைகளைப் பெற நல்ல வாய்ப்புகள் காணலாம். உங்கள் வேலை, நிதி நிலை பிரச்னைகளை புத்திசாலித்தனமாக கட்டுப்படுட்துவீர்கள்.புதிய நபர்களை சந்திப்பதும், வேலை, வணிகம் தொடர்பான திட்டங்கள் சிறப்படையும்.உங்கள் வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்கும்.
குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்தத் தகவலைக் கருத்தில் கொள்ளவும் முழுமையான விவரங்களைப் பெறவும் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுவது சிறந்தது.

Source link