தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, நடிகர்கள் பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஸைனிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட்டின் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸின் ஜி. தனஞ்சேயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ஃபாக்ஸ்ன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவாளராகவும், என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகவும், பி.ஏ. மகேந்திரன் கலை இயக்குநராகவும், அபிஷேக் ஸ்ரீனிவாஸ் சண்டை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
