November Horoscope 2026,நவம்பர் மாத ராசிபலன் 2026: 12 ராசிகளின் தொழில், நிதிநிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? – november horoscope 2026: career, financial outlook and family life for all 12 zodiac signs

நவம்பர் மாதத்தில் பல கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் வக்கிர நகர்வுகள் நடக்க உள்ளன. குறிப்பாக குரு, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளும், சுக்கிரன், புதனாகிய கிரகங்களின் வக்ர பெயர்ச்சிகளும் நடக்க உள்ளன. மேலும் இந்த கிரகங்களின் தாக்கத்தாலும், அவற்றின் சேர்க்கைகளால் உருவாகக்கூடிய யோகங்களாலும் 12 ராசிகளின் குடும்ப உறவு, காதல், தொழில் மற்றும் நிதிநிலை தொடர்பாக பல்வேறு விதத்தில் தாக்கங்களை ஏற்படுத்த உள்ளன. அவற்றின் பலன்களை தெரிந்து கொள்வோம்.

நவம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய கிரக பெயர்ச்சிகள்
நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு ராசிகளும் வேலை, தொழில் தொடர்பான திட்டமிடலும், தெளிவான தகவல் தொடர்பு, ஒழுக்கமான முறையில் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். இந்த மாதத்தில் நவம்பர் 6ல் சுக்கிரன் பின்னோக்கி நகர்ந்து துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியில் நுழைகிறார். நவம்பர் 12ல் செவ்வாய் கிரகத்திலிருந்து சிம்ம ராசியில் நுழைவு உள்ளார். நவம்பர் 13 வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். நவம்பர் 16ல் சூரியன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இது போன்ற கிரக நகர்வுகளால் சில ராசிகளுக்கு நன்மைகள் கிடைத்தாலும், சிலர் உறவுகள், காதல், தொழில், வேலை தொடர்பாக சிரமங்களை சந்திக்க நேரிடும். நவம்பர் மாதத்தில் 12 ராசிகளுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வோம்.
​

மேஷ ராசி

மேஷ ராசியின் இந்த மாத தொடக்கம் உங்கள் தொழில் தொடர்பான திட்டங்கள் சரியான விதத்தில் செயல்படுத்த நாள் எதிர்க்கும் இடத்தில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். பெண்கள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இந்த மாதத்தில் உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பதும், ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறோம் நன்மை தரும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ள கூடிய பயணங்கள் சாதகமான பலன் தரும். காதல் உறவில் உள்ள சிக்கல்கள், இடைவெளி கூட வாய்ப்புகள் உண்டு.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய மாதம். எதிர்காலத்தை மனதில் வைத்து நீங்கள் சிந்தனை உடன் செய்யக்கூடிய முதலீடு நன்மை ஏற்படுத்தும். உங்களுடைய மனம் மற்றும் உடலளவில் நன்றாக உணருவீர்கள். வேலை, தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் வெற்றியைத் தரும். பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். மாத கடைசியில் எதிர்பாலினத்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசி நிதி ஆதாயம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மாத தொடக்கத்தில் உங்களுடைய பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியம் கணிசமான அளவிற்கு உயரும். காதல் உறவு வலுவடைய கூடியதாக இருக்கும். சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பணியிடத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய ரிஸ்க் கூட எதிர்ப்புத்த பலனை தரக்கூடியதாக அமையும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதில்லை ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். உங்களுடைய சிறிய தவறுகளால் அதிக விலை தர வேண்டியது இருக்கும்.

கடக ராசி

கடக ராசி நேயர்களுக்கு சாதகமான கவனமாக அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நிபுணர்களின் ஆலோசனை உடன் இருக்கக்கூடிய நிதி முடிவு வருங்காலத்தில் லாபத்தை தரும். உங்களுக்கு பிடித்த சில இடங்களுக்கு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பாக செய்யக்கூடிய பயணங்களால் சாதகமான பலனும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் மரியாதை, மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாத இறுதியில் உங்களுடைய புத்திசாலித்தனமாக செயல்பாடுகளால் நன்மை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு ஒரு வேலை மற்றும் குடும்பம் பொறுப்புகளை கவனிப்பதில் சமநிலையை பேணவும். ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதமாக உடற்பயிற்சி மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். காதல் உறவு கொண்டதாக இருக்கும். உங்களுடைய குடும்ப பிரச்சினைகளை பெரிதாக பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்காக அமைதி கிடைக்கும். நீங்கள் தேவையற்ற பயணங்களை தள்ளிப் போடுவது நல்லது. வேலையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். சரியான தகவல் தொடர்பு கொண்டு, நீங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு குடும்பத்தினர் உடன் மகிழ்ச்சியாக நேரம் கிடைக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களிடம் இருந்து கணிசமான ஆதரவை பெறுவீர்கள். புதிய பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள் அதனால எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். காதல் வாழ்க்கையை விட்டுக்கொடுத்து சொல்வதும் அமைதியாக இருக்க முயற்சி செய்யவும். வேலை தொடர்பாக சூழ்நிலை சாதகமாக இருக்கும் அவற்றை சரியாக பயன்படுத்தக் கொள்ளவும். முடிவுகளில் அவசரம் வேண்டாம்.

துலாம் ராசி நண்பர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும், காதல் உறவில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய நிதிநிலை சார்ந்த வளர்ச்சியை காண்பீர்கள். வேலை, தொழிலில் வளர்ச்சி, வாய்ப்புகள் இருக்கும். நிதானமான மற்றும் சகோதரி மகன் உங்களுடைய செயல்பாடுகள் குடும்ப உறவையும் வேலை தொடர்பாக சூழ்நிலையை சாதகமாக மாற்றும். கடுமையான வார்த்தைகளில் தவிர்க்கவும். உடல் நலம் படிப்படியாக மேம்படக்கூடிய காலம். நீங்கள் விரும்பாத அல்லது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அல்லது தள்ளிப் போடுவது நல்லது.

துலாம் ராசி நண்பர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும், காதல் உறவில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய நிதிநிலை சார்ந்த வளர்ச்சியை காண்பீர்கள். வேலை, தொழிலில் வளர்ச்சி, வாய்ப்புகள் இருக்கும். நிதானமான மற்றும் சகோதரி மகன் உங்களுடைய செயல்பாடுகள் குடும்ப உறவையும் வேலை தொடர்பாக சூழ்நிலையை சாதகமாக மாற்றும். கடுமையான வார்த்தைகளில் தவிர்க்கவும். உடல் நலம் படிப்படியாக மேம்படக்கூடிய காலம். நீங்கள் விரும்பாத அல்லது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அல்லது தள்ளிப் போடுவது நல்லது.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி செந்தவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும், உங்கள் திட்டங்களுக்கு பெரியவர்கள் ஆசீர்வாதமும், ஆதரவும் கிடைக்கும். தங்களுடைய நிதிநிலை வளர்ச்சி காண்பதற்கான காலமாக அமையும். ஆரோக்கியம் குறிப்பிடத்தக்கவிதத்தில் முன்னேற்றம் அடையும். உங்களுடைய குடும்பத்தில் பெண்கள் தொடர்பான சில கவலைகள் அதிகரிக்கலாம். பயணங்கள் மேற்கொள்ளும்போது மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாத கடைசியில் குடும்பத்திலும், காதல் உறவிலும் தேவையற்ற வாக்குவாதங்களை நடைபெறும். காதல் உறவில் இனிமையான உணர்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசி நண்பர்களுக்கு நவம்பர் மாதம் வேலையில் முன்னேற்றம் தரும். உங்களுடைய பொருளாதார நிலையில் சீரான வளர்ச்சி தென்படும். குடும்பத்தில் கொண்டாட்டமும், மங்களகரமான நிகழ்வுகளும் நடக்கும். வேலை, தொழில் மனநிலை விலகும். வேலை, ஒப்பந்தங்கள் தொடர்பாக சாதகமான சூழ்நிலை நிலவும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்திலும், குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். மாத கடைசியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பணம் இழப்பு ஏற்படலாம். அதனால் கவனமாக இருக்கவும்.

மகர ராசி

மகர ராசி அன்பர்களுக்கு நிதி நிலையில் வளர்ச்சி காணக்கூடிய காலமாக நவம்பர் மாதம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் நன்மை தரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடா வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புக் உண்டு. வேலை, நிதிநிலை தொடர்பாக எடுக்கக்கூடிய முடிவுகள் இதற்கான பதில் சாதகமான பலனை தரும். காதல் உறவில் பிறரின் தலையீடுகளை தவிர்க்கவும். மாத இறுதியில் கொத்துநர்ச்சியும் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமைய வாய்ப்புகள் உண்டு.,

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றமும், நிதி நிலை வளர்ச்சியையும் காணக் கூடிய மாதமாக அமையும். உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகளும் உண்டு. வேலை, தொழில் தொடர்பாக திட்டமிடலும், நிதானமான செயல்படும் தேவைப்படும். உறவுகள் வலுவடையும். அனுகூல பலன் தரும் விதமான பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பாக கூடுதல் கவனம் தேவைப்படும். நிதி நிலை மற்றும் உடல் நலன் தொடர நாள் சில சிக்கல்கள் சந்திக்க நேரிடும்.

மீன ராசி

மீன ராசி நண்பர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரக்கூடிய காலமாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களுடன், ஆக்கபூர்வமான செயல்களில் நேரத்தை செலவிடுங்கள். இந்த மாதம் நீங்கள் நினைத்ததை விட செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், இணக்கமும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் மேற்கொள்வீர். பல நேரங்களில் நீங்கள் தனிமையை உணருவீர்கள். மாலை இறுதியில் சாதகமான சூழல், வாய்ப்புகள் உருவாக்கும்.

Source link