பணம் சேமிக்கணும்… அதே நேரத்தில் வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும்… இந்த இரண்டு விஷயத்தையும் சூப்பரா பேலன்ஸ் பண்ண உதவுகிற கருவிகள்தான் SIP மற்றும் SWP! இதில் SIP பற்றி ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. ஆனால், SWP….? இது பத்தி உங்களுக்குத் தெரியுமா? இதுவரைக்கும் தெரியாது என்றால், உடனே தெரிஞ்சுக்குங்க…
முதலில் SIP (Systematic Investment Plan) பற்றிக் கொஞ்சம் பார்த்துடுவோம். இது ஒரு ‘சின்ன சின்ன சேமிப்பு, பெரிய பெரிய லாபம்’ தர்ற ஒரு கான்சப்ட். அதாவது, மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை — உதாரணமாக 5,000 ரூபா, 10,000 ரூபா என மியூச்சுவல் ஃபண்ட்ல தொடர்ந்து முதலீடு செஞ்சிட்டு வர்றதுதான் SIP. இதை செய்ய ஆரம்பிச்ச சில மாதங்கள்லயே காலை எழுந்திருச்சு காப்பி குடிக்கிற மாதிரி ஒரு பழக்கமா மாறிடும். மாசாமாசம் இ.எம்.ஐ கட்டுற மாதிரி, நம்ம பேங்க் அக்கவுண்ட்ல இருந்து குறிப்பிட்ட அளவு பணம் SIP மூலமா சேர்ந்துகிட்டே இருக்கும். 5 வருஷம், 10 வருஷம் தொடர்ந்து இதை செஞ்சா, கணிசமான பணத்தை நாம முதலீடு செஞ்சு இருப்போம். இதுக்கு 12% லாபம் கிடைச்சா, 7 வருஷத்துல நாம கட்டுன பணம் டபுளா மாறியிருக்கும். அதுதான் SIP செய்ற மேஜிக்….
இப்போ SWP (Systematic Withdrawal Plan) பத்தி பேசுவோம். SIP-யோட ரிவர்ஸ் கியர்தான் SWP… அதாவது, நீங்க வேலை செய்ற காலத்தில் SIP மூலம் பணத்தை சேமிப்பீங்க. அப்படி சேர்த்த பணத்துல இருந்து ரிட்டயர்ட்-ஆனபிறகு கொஞ்சம் கொஞ்சமா எடுத்து செலவு பண்ண உதவுற ஒரு விஷயம் SWP. SIP – பணம் சேர்க்க உதவும் உண்டியல். SWP – உண்டியலில் சேர்த்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து செலவு செய்வது.
ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். சண்முகவேல் 30 வயதானபோது மாசாமாசம் ரூ.10 ஆயிரம் SIP மூலம் சேர்க்க ஆரம்பிச்சார். கடந்த 25 வருஷமா SIP மூலமா அவர் கட்டுன மொத்த 30 லட்சம் ரூபாய். 14% கூட்டு வட்டி வளர்ச்சியில் அவர் சேர்த்த பணம் 2.34 கோடி ரூபாயாக வளர்ந்து இருக்கிறது. சண்முகவேலுக்கு இப்போது அடேங்கப்பா… 55 வயதில் இவ்வளவு பணத்தைச் சேர்த்துவிட்டோமே என்கிற பெருமை அவருக்கு!
இப்ப சண்முகவேல் சேர்த்த பணத்துல இருந்து மாசாமாசம் 1 லட்சம் ரூபாயை அடுத்த 25 வருஷத்துக்கு SWP மூலமா திரும்ப எடுக்க முடியுமா என்று கணக்கு போடுகிறார். அப்படி கணக்கு போட்டுப் பார்த்ததில் 80 வயது வரை மாசாமாசம் 1 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடி ரூபாயை எடுக்கவும் முடியும். அப்படி எடுத்தது போக, அவர் சேர்த்து வைத்திருக்கிற பணம் 8.53 கோடி ரூபாயாக இருக்கும் என்பதைப் பார்த்த சண்முகவேலுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மகனும், மகளும் நல்ல வேலைக்குப் போய்விட்டார்கள் என்றாலும் அவருக்கான செலவுப் பணத்தை யாரிடமும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. தனக்குப் பிடித்த விஷயத்தை எல்லாம் செய்வதற்கு நல்ல விஷயத்தை செய்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் சண்முகவேல்.
சண்முகவேல் மாதிரி 30 வயதில் உள்ள எல்லோருமே இப்படி செய்யலாம்! ‘எனக்கு வயது 30 இல்லிங்க. 40…’ என்கிறவங்க அடுத்த 20 வருஷத்து எவ்வளவு பணத்தை SIP மூலமா மியூச்சுவல் ஃபண்ட்ல சேர்க்க முடியுமோ, அந்தளவுக்கு சேர்க்கலாம். ‘அய்யோ, எனக்கு வயது 50 ஆயிடுச்சு…’ என்கிறவங்க கவலைப்படாம, அடுத்த 10 வருஷத்துல SIP மூலமா மியூச்சுவல் ஃபண்ட்ல சேர்க்க முடியுமோ, அந்தளவுக்கு சேர்க்கலாம்.

சண்முகவேல் மாதிரி பணம் சேர்க்க நினைக்கிறவங்க, ரெண்டு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கிடணும். ஒண்ணு, பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பத்தி கவலைப்படாம முதலீடு செஞ்சுகிட்ட இருக்கணும். மார்க்கெட் எறங்கிட்டு இருக்கு. SIP-யை நிறுத்திடலாமான்னு நெனைச்சு நிறுத்துனீங்கன்னா, போச்சு! சொற்ப லாபம்தான் கிடைக்கும். ரெண்டாவது, SIP மூலமா பணத்தை சேர்த்தபிறகு SWP மூலமா பணத்தைத் திரும்ப எடுக்கிறப்ப, உங்களுக்குத் தேவையான அளவுக்குக் கொஞ்சமா பணத்தை எடுத்தீங்கன்னா, உங்க பணம் 20, 25 வருஷத்தும் வரும். பணம்தான் கோடிக் கணக்குல இருக்கில்லன்னு நெனைச்சு செலவு பண்ணா, சில வருஷத்துலயே மொத்த பணமும் கரைஞ்சுடும். பிறகு, எல்லார் மாதிரியும் யார் பணம் தருவாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற நெலை வந்துடும்.
முடிவாக, SIP மற்றும் SWP இரண்டும் சேர்ந்து உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பலமான ஃபைனான்ஷியல் பேக்போனா (financial backbone) இருக்கும். சரியான நேரத்துல SIP ஆரம்பிச்சு, தொடர்ந்து செஞ்சுகிட்டு வந்தாலே போதும், SWP மூலமா வாழ்க்கையை சூப்பரா என்ஜாய் பண்ணலாம்!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் – https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’-ஐத் தொர்புகொள்ளுங்கள் – மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.
