இன்றைய தேதியில் உலகத்தின் பல நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். தாயகத்தை விட்டு பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் புதிய மொழி, புதிய கலாசாரம், புதிய உணவு, புதிய சுற்றுச்சூழல் என எல்லா விதத்திலும் புதியதொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள் பல லட்சம் தமிழர்கள். புதிய நாட்டில் குடும்ப சகிதமாக இருக்கமுடியாது என்பதால், பலரும் தனியாகத்தான் அங்கு வசிக்கிறார்கள்.
இப்படி பல விதங்களிலும் கஷ்டப்பட்டுத்தான் அவர்கள் மாதந்தோறும் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். இந்தப் பணத்தில் பெரும் பகுதி அவர்கள் வெளிநாட்டில் வாழ்க்கை நடத்துவதற்கும், தமிழ்நாட்டில் இருக்கும் குடும்பத்தின் செலவுகளுக்காகப் பணம் அனுப்பவுமே செலவாகிவிடுகிறது. இதனைத் தாண்டி கொஞ்சம் பணத்தையாவது முதலீடு செய்யலாம் என்று நினைக்கும்போது, மிக மிக சிலர் மட்டுமே சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். ஏதோ ஒரு பிரச்னை காரணமாக தவறான திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு மிகக் குறைந்த வருமானமே கிடைத்தது. அல்லது, நஷ்டம் வந்துவிட்டது என்று நினைத்து வருந்துகிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் செய்யும் மூன்று முக்கியமான தவறுகள் என்னென்ன, அவற்றை எப்படி சரிசெய்துகொள்ளலாம் என்று பார்ப்போம்.
1. சரியான வரவு – செலவுக் கணக்கு இல்லாதது…
வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களிடம்/தமிழர்களிடம் குடும்ப பட்ஜெட் அல்லது வரவு – செலவுக் கணக்கு என்பது இல்லை என்பதைப் பலரிடமும் பேசும்போது தெரிய வருகிறது. வெளிநாட்டில் எவ்வளவு சம்பாதிக்கிறோம், அங்கே எவ்வளவு செலவு ஆகியது, தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்துக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறோம், அவர்கள் அந்தப் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள், அவசியமான திட்டங்களுக்குத் தான் பணத்தை ஒதுக்கி செலவு செய்கிறோமா என்பதை எல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து செய்யும் பழக்கம் பலரிடத்திலும் இல்லை; மிகச் சிலரிடத்தில் மட்டும்தான் இருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள் அனுப்பும் பணத்தை தமிழ்நாட்டில் இருக்கும் குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும் என்று அனுப்புவது தவறல்ல. ஆனால், அவர்கள் அந்தப் பணத்தை சரியாகத்தான் செலவு செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பலே இருப்பது தவறு. இந்த மாதம் இந்தந்த செலவுகள் இருக்கின்றன. அந்த செலவுகளை இப்படி இப்படி செய்யலாம் எனக் குடும்பத்தினருடன் கலந்துபேசி செய்யும்போது, அந்தப் பணம் கச்சிதமாக செலவாவதைப் பார்க்கலாம்.
அதே போல, சகோதர்கள், சகோதரிகள் கேட்கும்போதெல்லாம் பணம் தருவதும் சரியான பழக்கமாக இருக்காது. வெளிநாட்டில் நிறைய சம்பாதிக்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்கு நம்மிடம் இருந்து பலரும் பணத்தை எதிர்பார்க்கிற மாதிரி வைத்துக்கொள்ளக் கூடாது. உறவினர்களுக்குப் பணம் தந்தாலும் அது சரியான காரணத்திற்காகத்தான் தருகிறோமா என்பதை நன்கு யோசித்து முடிவு செய்வது நல்லது. இன்றைக்குப் பணம் இருக்கும்போது தந்துவிட்டு, பிற்பாடு பணத் தேவை வரும்போது யாரும் நமக்குப் பணம் தந்து உதவ மாட்டார்கள் என்பது நிச்சயம். எனவே, பணம் விஷயத்தில் கருமியாக இருக்கத் தேவையில்லை. ஆனால், கச்சிதமாக இருக்க வேண்டும் என்பது நிச்சயம்!
2. பாதுகாப்பு கருதி ரிஸ்க் எடுக்காமல் இருப்பது…
உலகம் முழுக்கவும் உள்ள தமிழர்கள் பணத்தை சேர்த்துவைக்கும்போது பாதுகாப்பு என்கிற விஷயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள். நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காகப் பணவீக்கம் அளவுக்குக்கூட வருமானம் தராத பல விஷயங்களில் பணத்தை வைத்திருக்க வேண்டுமா என்பதைப் பலரும் யோசிப்பதே இல்லை. உதாரணமாக, என்.ஆர்.இ வங்கிக் கணக்கில் எஃப்.டி.யில் பணத்தைப் போட்டு வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு 6.50% வட்டி கிடைக்கிறது. இதற்கு வரி எதுவும் இல்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்தான்.
உதாரணமாக, ஒருவர் என்.ஆர்.இ எஃப்.டி.யில் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 5 ஆண்டுகளில் 6.50% வட்டி வருமானம் மூலம் அவருக்கு ரூ.69 லட்சம் கிடைக்கும். ஆனால், இதே பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இல்லாத ஹைபிரீட் திட்டம் ஒன்றில் போட்டு, அதன் மூலம் 10% வருமானம் கிடைத்தால்கூட அவருக்கு 5 ஆண்டுகள் கழித்து ரூ.80.52 லட்சம் கிடைக்கும். ரூ.30 லட்சத்தில் 12.5% வரி என எடுத்துக்கொண்டாலும்கூட ரூ.3.75 போகும். அதன்பிறகும் ரூ.26.25 லட்சம் லாபமாகக் கிடைக்கும். கரன்ஸி மதிப்பு குறைவு என இன்னுமொரு 3 லட்சம் ரூபாய் போனால்கூட ரூ.26.25 லட்சம் லாபமாகக் கிடைக்கும். வங்கி எஃப்.டி.யில் கிடைக்கும் லாபத்தைவிட ஹைபிரீட் ஃபண்டில் அதிகமாகக் கிடைக்கும் லாபம் அதிகம் என்பது புரிகிறதா?
கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் எடுத்தால், இந்த லாபத்தை எல்லோரும் அனுபவிக்க முடியும். எனவே, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற அதே நேரத்தில், அதிகமான வருமானத்தையும் தருகிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
வரும் சனிக்கிழமை அன்று மதியம் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் வெளிநாட்டுத் தமிழர்கள் இந்த லிங்க்கைக் கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாமே!

3. பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவது…
வெளிநாடுகளில் பல்லாயிரம் தமிழர்கள் பங்குச் சந்தையில் டீமேட் கணக்கு தொடங்கி நேரடியாகப் பங்குகளை வாங்குகிறார்கள். அல்லது, அந்த டீமேட் கணக்கு மூலமே மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தந்தாலும், இந்த முறையின்மூலம் பலரும் எதிர்காலத்துக்குத் தேவையான செல்வத்தைப் பெருக்க பலராலும் முடிவதில்லை. முதலில், எந்தப் பங்கை வாங்க வேண்டும், எந்தப் பங்கை வாங்கக் கூடாது என்று தெரியாமல், ஏதோ ஒரு பங்கை வாங்கி நஷ்டப்படுகிறார்கள். இரண்டாவது, ஓரளவு லாபம் கிடைத்தாலும் அந்தப் பங்கை விற்று, லாபம் பார்க்கும் ‘டிரேடிங்’ மனோபாவத்துடன் தான் செயல்படுகிறார்களே தவிர, வாரன் பஃபெட் போல யாரும் நீண்ட காலத்துக்கு வைத்திருந்து, பெரும் செல்வத்தை சேர்ப்பதில்லை.
டீமேட் கணக்கு மூலம் டைரக்ட் ஃபண்டுகளை வாங்குபவர்களுக்கு ‘எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ என்கிற வகையில் கொஞ்சம் பணம் மிச்சமாகலாம். ஆனால், எந்த ஃபண்டில் முதலீடு செய்வது என்று தெரியாமல், ஏதோ ஒரு ஃபண்டில் முதலீடு செய்வதன்மூலம் குறைந்த லாபமே கிடைக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், ஒரு ஃபண்ட் ஆலோசகரின் வழிகாட்டுதலில் சரியான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுதான் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தைப் பெருமளவில் சேர்க்க முடியும்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த மூன்று தவறையும் செய்யாமல் இருந்தாலே போதும், பெருமளவில் பணத்தை சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!
‘லாபம்’ டீமுடன் நேரடியாகப் பேசி முதலீட்டு ஆலோசனை பெறுங்கள்!
‘லாபம்’ மூலம் நீங்கள் ரெகுலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டீர்களா, இதற்கு சரியான வழிகாட்டுதல் உங்களுக்குத் தேவையா? ஆம் எனில், பின்வரும் லிங்கினை கிளிக் செய்து எங்களுடன் பேசி சரியான முதலீட்டு ஆலோசனை பெற உங்களுக்கான நேரத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்… இதற்கான லிங்க்….
NRI https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
Whatsapp Groups
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ‘லாபம்’ வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்… https://chat.whatsapp.com/DbJob5Df5Ze1eT3cwsYN9N
Labham Whatsapp Channel
‘லாபம்’ வாட்ஸ் அப் சேனலில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்…
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: www.labham.money/tamil
