Odisha DA Hike,அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு – அசாம் அரசு அறிவிப்பு! – dearness allowance hike by 5 percent to this state govt employees happy news

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய அகவிலைப்படி உயர்வுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்த உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் அறிவிக்கப்படலாம். இதற்கிடையில், ஒடிசா அரசு, 2008ஆம் ஆண்டு ஒடிசா திருத்தப்பட்ட ஊதிய விகித (ORSP) விதிகளின் கீழ் வரும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவால் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கீழமை நீதித்துறை அலுவலர்கள், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு !

ஒடிசா மாநில நித் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அடிப்படை மற்றும் கிரேடு ஊதியத்தில் 257 சதவீதமாக இருந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி, 2026 ஜனவரி 1 முதல் அமலாகும் வகையில் 262 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கான நிலுத்தொகை, ஜூலை மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் சரண் மாஜியின் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வுக்கு இணையாகவும், மாநிலத்தின் நிதி இலக்குகளுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதோடு, மே 15 அன்று மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வை ஒடிசா அரசு அறிவித்தது. இதன் மூலம் அகவிலைப்படியானது 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு, ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு மே மாத ஊதியத்துடன் வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த உயர்வு 3% முதல் 4% வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அரசு தரப்பு புள்ளி விவரங்களின்படி, 2026 ஜூன் மாதம் சில்லறை பணவீக்கம் 4.38 % ஆகவும், உணவுப் பணவீக்கம் 5.32 % ஆகவும் உயர்ந்துள்ளது. இறுதி அகவிலைப்படி உயர்வானது, ஜூன் 2026 க்கான அகில இந்திய தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீட்டு எண் (AICPI-IW) தரவு மற்றும் அதைத் தொடர்ந்து அரசின் ஒப்புதலைப் பொறுத்து அமையும்.

AICPI-IW குறியீட்டு எண் 2026 மார்ச் மாதம் 149.1 ஆகவும், ஏப்ரல் மாதம் 149.9 ஆகவும், மே மாதத்தில் 150.8 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும், ஜூன் மாதத்திற்கான உத்தேச மதிப்பு 151.7 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. மே மாதத்தைப் போன்றே வளர்ச்சியடைந்தால், அகவிலைப்படி 4 % வரை உயர்ந்து 64 சதவீதத்தை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்த பல மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. சமீபத்தில் மேற்கு வங்க அரசு கடந்த மாதத்தில் அகவிலைப்படியை 20 % உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 38 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முன்னதாக, அருணாச்சல பிரதேசம், அசாம், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 2 % உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. அதேசமயம் பீகார் அரசு, 7ஆவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு 2 %, 6ஆவது ஊதியக் குழுவின் கீழ் உள்ளவர்களுக்கு 5 % மற்றும் 5வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு 9 % அகவிலைப்படி உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source link