Operation Him Setu: சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய 1,321 சுற்றுலாப் பயணிகளை வெற்றிகரமாக மீட்ட ராணுவம்

சில நாட்களுக்கு முன்பு, வடக்கு சிக்கிமின் லாச்சென் பகுதியில் லாச்சென்-சுங்தாங் சாலை நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்தது.

நிலச்சரிவு காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவத்தின் போராடி மீட்டுள்ளது.

ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஹிம் சேது’ என்ற இந்த சிறப்பு நடவடிக்கையில், 48 மணி நேரத்திற்குள் 1,321 சுற்றுலாப் பயணிகளும் 84 உள்ளூர் மக்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

நிலச்சரிவால் லாச்செனுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை மீட்டெடுக்க, ராணுவம் தற்காலிக நடைப்பாலத்தைக் கட்டியது.

இதன் விளைவாக, அபாயகரமான பகுதி வழியாக சுற்றுலாப் பயணிகளை மோசமான வானிலைக்கிடையில் பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது.

இந்த மாபெரும் மீட்பு நடவடிக்கையை இந்திய ராணுவத்தின் ‘திரிசக்தி படைப்பிரிவு’ மேற்கொண்டது. எல்லைச் சாலைகள் அமைப்பும் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றியது.

தொலைதூரப் பகுதிகளில் சிக்கிக்கொண்ட வாகனங்களும் ராணுவ வாகனங்களின் உதவியுடன் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து சாலைகளைச் சீரமைக்கும் பணிகளில் அவர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Source link