PM Kisan Status Check Online,பிஎம் கிசான் பணம் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும்? மூன்று அப்டேட்கள் முக்கியம் – pm kisan 24th installment amount waiting get this work done immediately

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணைத் தொகையாக 2000 ரூபாய் வரவிருக்கிறது. அதற்கு முன்பாக நீங்கள் முடிக்க வேண்டிய அப்டேட்கள் உள்ளன.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா ( பிஎம் கிசான் ) திட்டத்தின் அடுத்த தவணைத் தொகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரபி பருவப் பயிர்களை விதைக்கும்போதும், விதைகள் மற்றும் உரங்களை வாங்கும்போதும், இந்தத் தொகை விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக அமைகிறது. தசரா பண்டிகைக்குப் பிறகும், தீபாவளிக்கு முன்பாகவும் தலா 2,000 ரூபாய் கொண்ட இந்தத் தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்தத் தவணை எப்போது வரும் என்பதையும், தாமதம் வராமல் இருக்க நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

24ஆவது தவணை எப்போது வரும்?

பிஎம் கிசான்திட்டத்தின் 23வது தவணை 2026 ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டது. திட்டத்தின் விதிகளின்படி, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை ரூ. 2,000 தவணைத் தொகை வழங்கப்படுகிறது. அந்த நான்கு மாத கால அவகாசம் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஒரு முக்கிய பொது நிகழ்ச்சியின் போது, ​​பிரதமர் மோடி நம் நாட்டின் சுமார் 9.3 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிஎம் கிசான் நிதியை மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்று அப்டேட்கள் முக்கியம்!

சமீபத்தில், மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தகுதியற்ற பலரின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே உங்கள் நில ஆவணங்களிலோ அல்லது வங்கிக் கணக்கிலோ ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், உங்களுக்கான தவணைத் தொகையும் நிறுத்தப்படலாம். எனவே, பின்வரும் விஷயங்களை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும். முதலில் உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் பிஎம் கிசான் இணையதளத்தில் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது முக்கியம்.

அடுத்து, உங்கள் ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு, நேரடிப் பணப் பரிமாற்றத்திற்கு (DBT) செயலில் இருக்க வேண்டும். அடுத்து, நில வருவாய் ஆவணங்களில் உள்ள பெயர் சரியாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். கூட்டு உரிமை இருந்தாலும், சில சமயங்களில் சிக்கல்கள் எழுகின்றன. இதைத் தீர்க்க வேளாண்மை அதிகாரியை அணுக வேண்டும்.

நிலையை எவ்வாறு சரிபார்ப்பது?

உங்கள் அடுத்த தவணை வருமா என்பதை அறிய முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள ’Know Your Status’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் பதிவு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். திரையில் உங்கள் இ-கேஒய்சி, நிலப் பதிவு மற்றும் வங்கி/ஆதார் இணைப்பு ஆகியவற்றின் நிலை காட்டப்படும். எங்காவது ‘No’ என்று இருந்தால் அதை உடனடியாகத் திருத்த வேண்டும்.

இணையவழி மோசடிகளில் எச்சரிக்கை வேண்டும்!

பண்டிகைக் காலங்களில் மோசடியாளர்கள் மிகவும் தீவிரமாகச் செயல்படுவார்கள். எனவே, உங்கள் பிஎம் கிசான் கேஒய்சி சரிபார்ப்பை நிறைவு செய்வதாகவோ அல்லது தவணையை விடுவிப்பதாகவோ கூறி உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தாலோ அல்லது இணைப்பு அனுப்பப்பட்டாலோ, அதை கிளிக் செய்யக் கூடாது. எந்தவொரு வங்கி அல்லது அரசு அதிகாரியும் தொலைபேசியில் ஓடிபி (OTP) கேட்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, யாராவது கேட்டால், மறுத்துவிட வேண்டும். ஒரு அதிகாரி அல்லது ஊழியர் வேலைக்கு ஈடாக பணம் கேட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையிலோ அல்லது உதவி எண் மூலமாகவோ புகார் அளிக்க வேண்டும்.

Source link