பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அடுத்த தவணைத் தொகை வருவதற்கு முன் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை.
நீங்கள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் பயனாளியாக இருந்து, உங்களது அடுத்த 2,000 ரூபாய் தவணைக்காகக் காத்திருக்கிறீர்கள் என்றால், முதலில் உங்கள் பிஎம் கிசான் பயனாளி சரிபார்ப்பது அவசியம். e-KYC முழுமையடையாதது, ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களில் உள்ள தவறுகள் அல்லது இதர தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விவசாயிகளுக்குத் தவணைத் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், உங்களது மொபைல் போன் மூலமாகவே வீட்டிலிருந்தபடியே அடுத்த தவணைத் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்பதைச் சில நிமிடங்களில் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
போன் மூலம் PM கிசான் பயனாளி நிலையை சரிபார்ப்பது எப்படி?
முதலில், PM கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Know your status’ அல்லது ‘ Beneficiary status ‘ என்ற தேர்வைக் கிளிக் செய்ய வேண்டும்.
உடனே உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐப் பதிவிட வேண்டும்.
இப்போது உங்களது விண்ணப்பத்தின் நிலை, முந்தைய தவணைகளின் விவரங்கள் மற்றும் அடுத்த தவணைப் பற்றிய தகவல்கள் திரையில் தோன்றும்.
உங்கள் விவரங்களில் கட்டாயம் சரிபார்க்க வேண்டியவை!
e-KYC முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?
ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா?
வங்கி கணக்கு விவரங்கள் சரியாக உள்ளனவா?
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது நிலுவையில் உள்ளதா?
ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் உள்ளவா?
நீங்கள் பார்க்க வேண்டியது!
மேற்கூறிய விவரங்களைக் கவனிக்கத் தவறினால், உங்களது 2,000 ரூபாய் தவணைத் தொகை நிறுத்தப்படலாம். இத்திட்டத்தின் பலன்களைத் தொடர்ந்து பெற இந்த விஷயங்களை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்.
PM கிசான் திட்டம் என்றால் என்ன?
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது தலா ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளாக, நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
தவணைத் தொகை வருவதற்கு முன் செய்ய வேண்டியவை!
உங்கள் நிலையைச் சரிபார்க்கும்போது e-KYC அல்லது வங்கி கணக்கு விவரங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பது தெரிந்தால், அவற்றை உடனடியாகச் சரிசெய்து கொள்ள வேண்டும். இது உங்களது அடுத்த ரூ. 2,000 தவணைத் தொகை எவ்வித தடையுமின்றி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுவதை உறுதி செய்யும்.
மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிறையப் பேர் தகுதியே இல்லாமல் போலியான ஆவணங்கள் மற்றும் ஆதார் கார்டு மூலமாக அரசிடம் பயன்பெற்று வருகிறது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்துக்கான விதிமுறைகளை அரசு கடுமையாக்கியுள்ளது. தகுதியான விவசாயிகள் மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவியைப் பெறவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் கேஒய்சி சரிபார்ப்பு, ஆதார் சரிபார்ப்பு, நில சரிபார்ப்பு போன்ற விதிமுறைகளில் அரசு அதிக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
