Priyanka Mohan: "யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?" – பிரியங்கா மோகன் சொன்ன பதில் என்ன?

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், ‘வடசென்னை 2’ படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார்.

பிரியங்கா மோகன் - Priyanka Mohan

சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது.

நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ப்ரியங்கா மோகன்
ப்ரியங்கா மோகன்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், “வடசென்னை 2′ படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன், இந்நிகழ்வில் நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை எனவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், “கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது.

தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன்.

அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்” என்றார்.

அவரிடம், “யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் தந்தவர், “நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை” என்றார்.

மேட் இன் கொரியா படத்தில்...
மேட் இன் கொரியா படத்தில்…

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Source link