Puducherry Assembly Election| அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து ஏப்.6-ந்தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம்

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க., ல.ஜ.க., ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி ரோடுஷோ நடத்த உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 6-ந்தேதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார். இற்காக மண்ணாடிப்பட்டு திருக்கனூர் பகுதியில் பொதுகூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

Source link