Ramadoss | ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா இவர்களை சும்மா விட மாட்டேன் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று சேலம் மாவட்டத்தின் பள்ளப்பட்டி பகுதியில், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருளை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கிய போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராமதாஸ் மயங்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்த தொண்டர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை அளவு குறைந்ததால் திடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் இயல்புநிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், தந்தை ராமதாஸ் மயங்கியது பற்றி அன்புமணி ராமதாஸ் பா.ம.க. நிர்வாகியிடம் மேடையிலேயே பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

வீடியோவின் படி, விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தின் போது, “ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனா, இவர்களை நான் சும்மா விட மாட்டேன்,” என்று கூறுகிறார்.

Source link