தெலங்கானா மாநில அரசின் ‘Gaddar’ திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது.
இதில் ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார்.
இந்நிலையில் விருது வாங்கியது குறித்து ராஷ்மிகா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நான் சிறுவயதில் இருக்கும்போது, மாநில அளவில் யாராவது விருதுகளை பெற்றால் நான் அவர்களை ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது போலத் தான் பார்ப்பேன்.
இவர்கள் எப்படி சாதித்தார்கள்? அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்?’ என்றெல்லாம் யோசிப்பேன்.
ஆனால், நேற்று மாலை நானே ஒரு மாநில விருதைப் பெற்றது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணமாக இருந்தது.
அதனை என் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் நான் கடந்து வந்த பாதை மிக நீண்டது என்பதை என்னால் உணர முடிகிறது. பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.

இந்த ஆண்டு எனக்கு ஓர் அழகான தொடக்கமாக அமைந்திருக்கிறது. அதுவும் தெலங்கானா மாநிலம் என்னை ஒரு மாநில விருதோடு வரவேற்பது இன்னும் ஸ்பெஷலாக இருக்கிறது.
‘தி கேர்ள் பிரண்ட்’-ஐ இவ்வளவு சிறப்பாக உருவாக்கியதற்கு நன்றி ராகுல் (படத்தின் இயக்குநர்)” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
