ஜோதிடத்தில் சனி பகவான் அசுப கிரகம் என அழைக்கப்பட்டாலும், அவர் நீதிமான் மற்றும் கர்ம காரகனாகவும் செயல்படுகிறார். வேத ஜோதிடம் மற்றும் பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் ஆகிய நூல்களில் சனி பகவானை பொறுமை, கர்மபலன் நீதியின் காரணியாக விவரிக்கின்றன. அவருடைய ஆசிர்வாதம் ஒருவருக்கு கிடைக்கும் போது, ஸ்திரத்தன்மை வலுவாகிறது. அவர் மேற்கொள்ளும் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்க தொடங்கும்.
ஜோதிடத்தில் கிரகங்களை சுப கிரகங்களாகவும், அசுப கிரகங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன.அதில் அசுப கிரகமாக கருதப்படும் சனி பகவான், துன்பங்களை தருவார் என நம்புகின்றனர். இருப்பினும் அவர் ஒரு நீதிமான் மற்றும் கர்ம காரகன் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஒருவர் செய்யக்கூடிய செயலுக்கு ஏற்ற பலன்களை தரக்கூடியவர். இந்த விதத்தில் இந்த ஏழு அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் தென்பட்டால் உங்களுடைய தடைபட்ட அல்லது பாதியில் நின்ற செயல்கள் மீண்டும் நடைபெற தொடங்கும். இது சனியின் பார்வை உங்கள் மீது விழும் ஒரு அறிகுறி ஆகும்.
கடின உழைப்பிற்கான பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி கர்ம வினைகளின் பலன்களை தீர்மானிக்க கூடிய கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். இவருடைய சுப பார்வை மற்றும் சாதகமான நிலையில் இருக்கும்போது, நீண்ட காலமாக நேர்மையான முயற்சிகள் படிப்படியாக நல்ல பலன்களை தர தொடங்கும். மேலும் வேலை, திட்டமிடல் தொடர்பாக தடை மற்றும் தேக்கமடைந்த விஷயங்கள் வேகம் அடையும். கடின உழைப்பிற்கான எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும்
ஒருவருடைய வாழ்க்கையில் வேலை, குடும்ப வாழ்க்கை, தொடர்பான பல்வேறு பிரச்சனைகளும், நிலையற்ற மனநிலையும் இருக்கும். சனி பகவானின் அருள் பார்வையானது உங்கள் மீது விழும் போது, உங்கள் வாழ்க்கையில் அந்த பிரச்சனைகள் எல்லாம் விலகி வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். உங்களுடைய சூழ்நிலை திடீரென மாறாது. இருப்பினும் அதை மாற்றுவதற்கான விதத்தில் நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம், வேலை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் வருமானம் தொடர்பான இதயங்களில் சமநிலை உருவாக தொடங்கும்.
தடைகள், தாமதங்கள் விலகும்
சனி அருள் இல்லாத நேரத்தில் உங்களுடைய பணிகளில் அடிக்கடி தடைகள் தாமதங்களும் ஏற்படும். காரணம் இன்றி உங்களுடைய கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும் தாமதம் ஏற்படும். தேவையற்ற தடைகள் தாமதங்கள் ஏற்படும். அதுவே சனியின் சாதகமான நிலைவரும்போது உங்களுடைய தலைகள் விலகி பணிகள் படிப்படியாக முன்னேற்றமடையும். முயற்சிகள் விரும்பிய பலனை தர தொடங்கும்.
பதவி உயர்வு, மரியாதை கூடும்
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் சாதகமான நிலையில் இருக்கும் நேரத்தில் ஒருவருக்கு மரியாதை மற்றும் உழைப்புக்கேற்ற பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்கும். அந்த மரியாதை மற்றும் பதவி உயர்வு, அவருடைய செல்வாக்கிலிருந்து வருவதில்லை. மாறாக அவர் நடந்து கொண்ட ஒழுக்கமான, நேர்மையான, நம்பகத்தன்மையான மற்றும் நற்செயல்களில் இருந்து கிடைக்கிறது. இதன் விளைவாக பணியிடத்தில் சக ஊழியர்களும் உட்பட உங்களை சுற்றி உள்ளவர்கள் மூலம் மரியாதையும், வேலையில் இருப்பவர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். இது உங்களுடைய பணி திறமை முன்னேற்றம். சமூகத்திலும் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.
பொருளாதார நிலை உயரும்
சனி பகவான் உங்களுக்கு சாதகமான அமைப்பில் இருக்கும் போது பல சுப அறிகுறிகள் உங்களுக்கு நல்ல பலனை தரும். உங்களுடைய வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். சனியின் அருள் கிடைக்கும் காலத்தில் முன்னேற்றமும் அதன் மூலம் எதிர்பாராத லாபமும் ஏற்படும். இது உங்களுடைய செல்வ நிலையை உயர்த்தும். தேவையற்ற செலவுகள் குறைவதோடு சேமிக்கும் எண்ணமும் ஏற்படும். பணம் தொடர்பான ஒழுக்கமான நிலையை கடைப்பிடிப்பீர்கள்.இது உங்களுடைய நிதி சூழலை பராமரிக்க உதவும்.
பொறுமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்
சனியின் அருள் கிடைக்கும் நேரத்தில் உங்களுடைய செயல்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக எதிலும் உணர்ச்சிவசப்படாமல், விவேகத்துடன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்படவும் முடிவு எடுக்கும் சனிபகவான் கற்றுத் தருவார். உங்கள் வேலையை, குடும்ப சூழலில் உள்ள கடினமான சூழல்களை சமாளிக்கவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவும்.
நேர்மை மற்றும் ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும்
சனி பகவான் நீதியின் கடவுளாகவும், நீங்கள் செய்யக்கூடிய சேவை மற்றும் செயல் திறனுக்கான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சனியின் சுப பார்வை இருப்பின் அவருடைய செயல்பாடுகளில் பணிவு, கடமை உணர்வு, சமூகப் பொறுப்புடன் சூழ்நிலை அணுகுவார்.
வேத ஜோதிடத்தில் சனியின் சுப பலன்கள் அவருடைய பார்வையை மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாது ஜாதகத்தில் அவருடைய நிலை, வலிமை, தன்மை மற்றும் கோச்சார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
