SIR: உத்தரப் பிரதேச வாக்காளர் இறுதிப் பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்.. 2 கோடி பேர் நீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி SIR க்கு முன்பு பட்டியலில் இருந்த 2.05 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 27, 2025 அன்று SIR நடவடிக்கை தொடங்கியபோது அங்கு 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

முதல் கட்டத் திருத்தத்திற்குப் பின் ஜனவரி 6 வெளியான பட்டியலில் இந்த எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைந்தது.

மொத்தம் 3.26 கோடி வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிச் சரிபார்ப்பு நடத்தியது

பரிசீலனைக்கு பிறகு தற்போது இறுதிப் பட்டியலின்படி மாநிலத்தின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை 13.39 கோடி ஆகும்.

Source link