SL vs NZ: "எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்"- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்

“கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் எவ்வளவுதான் நேர்மறையாக (positive) இருக்க முயன்றாலும், வெளியே எதிர்மறையான சூழலே நிலவுகிறது”- தசுன் ஷனகா

தசுன் ஷனகா

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

“நிறைய நேரங்களில் நாம் காண்பதும் கேட்பதும் எதிர்மறையான விஷயங்களாகவே இருக்கின்றன.

SL vs NZ
SL vs NZ

எதிர்மறையான சூழல்

கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் எவ்வளவுதான் நேர்மறையாக (positive) இருக்க முயன்றாலும், வெளியே எதிர்மறையான சூழலே நிலவுகிறது.

இது இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய இழப்பு. நமக்கு இருக்கும் ஒரே விளையாட்டு இதுதான், இதை நம்மால் பாதுகாக்க முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை.

அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள்

“ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும்.

எல்லோருக்கும் கவலைகள் உண்டு. அதைப்பற்றி பேசி சரி செய்வதை விட, எதிர்மறை எண்ணங்கள்தான் முன்னுக்கு வருகின்றன.

நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் வருங்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த (எதிர்மறை விமர்சனங்களை) நிறுத்த முடிந்தால் அது அவர்களுக்கு நல்லது.

தசுன் ஷனகா
தசுன் ஷனகா

ரசிகர்களிடம் மன்னிப்பு

“அணி எப்போதும் சிறப்பாக செயல்படவே முயற்சி செய்கிறது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எங்களால் நியாயம் செய்ய முடியவில்லை. ரசிகர்களுக்கு நாங்கள் கொடுக்க நினைத்ததைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.

Source link