Smartphone Sales,ஸ்மார்ட்போன் விற்பனை கடும் வீழ்ச்சி: ஐபோன் பின்னடைவு – முதலிடத்தில் சாம்சங் – smartphone sales in india down by 26 percent still samsung tops the chart

ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 20 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஒப்போ, விவோ மற்றும் ஆப்பிள் ஐபோன் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விற்பனையும் ஒவ்வொரு மாதமும் உயர்ந் துகொண்டே இருக்கிறது. ஆனால் சமீப காலமாக ஸ்மார்ட்போன் விற்பனை யில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை இப்போது 26 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஓம்டியா வெளியிட்ட அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் சரிந்து 35.8 மில்லியனாகக் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூன்றாவது காலாண்டில் பதிவான மிகக் குறைந்த விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

ஆப்பிள் ஐபோன் விற்பனையும் வீழ்ச்சி!

இந்த அறிக்கையின்படி, விவோ, ஒப்போ மற்றும் சியோமி போன்ற முக்கிய சீன நிறுவனங்களின் விற்பனை இந்தக் காலகட்டத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. அதே சமயம், சாம்சங் நிறுவனம் ஒரு சிறிய சரிவைச் சந்தித்த போதிலும் மீண்டும் முதலிடத்திற்குத் திரும்பியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. எனினும், முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ந்து நீடிக்கிறது.

சாம்சங் சிறப்பான விற்பனை!

பண்டிகை காலம் இருந்தபோதிலும், 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் சரிந்து 35.8 மில்லியன் யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே மிகக் குறைந்த மூன்றாவது காலாண்டு விற்பனையாகும். அந்த அறிக்கையின்படி, மூன்றாவது காலாண்டில் 6.7 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனையுடன் சாம்சங் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 1 சதவீதம் சிறிதளவு குறைந்திருந்தாலும், அதன் சந்தைப் பங்கு 19 சதவீதமாகவே நீடிக்கிறது.

800 ரூபாய் குறைந்த தங்கம் விலை: நகை வாங்க நல்ல வாய்ப்பு

விவோ, சியோமி, ஒப்போ விற்பனை!

மூன்றாம் காலாண்டில் விவோ நிறுவனம் 6.4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சியோமியின் விற்பனை 28 சதவீதம் சரிந்து 4.7 மில்லியனாகவும், ஒப்போவின் விற்பனை 24 சதவீதம் சரிந்து 4.9 மில்லியனாகவும் குறைந்தது. ஆப்பிள் 3.9 மில்லியன் போன்களை விற்பனை செய்திருக்கிறது.

இந்த மிகப்பெரிய சரிவுக்கு காரணம் என்ன?

இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஸ்மார்ட்போன் விற்பனை மந்தமாக இருந்தது. குறிப்பாக, ஆன்லைன் விற்பனைக்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாடல்களின் எண்ணிக்கை குறைந்தது. மலிவு விலை கைபேசிகளின் இருப்பு குறைவாக இருந்தது. மேலும், விளம்பரத் திட்டங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்ததும் இந்த விற்பனை விற்பனை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.

நடப்பு காலாண்டில் எப்படி இருக்கும்?

தற்போது இந்தியாவில் பண்டிகை சீசன் நடந்து கொண்டிருப்பதால் நடப்பு அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாப்பிங் செய்வதற்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிகமாக ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அக்டோபர் – டிசம்பர் காலாண்டு சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

Source link