தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளின் வேட்பாளர்கள், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழகம் சார்ந்து பிரதமர் மோடியை கேட்பதற்கு நிறைய உள்ளது.
* கிறிஸ்தவ நிறுவனங்களை குறிவைத்து FCRA மசோதாவை கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு.
* FCRA மசோதாவால் சிறுபான்மை மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
