Sun Mercury Conjunction Zodiac Signs,ஆகஸ்டில் சூரியன்–புதன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு சிக்கல்கள் மற்றும் தடைகள் குறைய வாய்ப்பு – sun–mercury conjunction in august 2026: three zodiac signs that may see obstacles ease

பெரும்பாலான நேரங்களில் சூரியன் மற்றும் புதன் மிக அருகில் அல்லது ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள். தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வரும் சூரியனுடன், ஆக்ஸ்ட் 5ம் தேதி புதன் இணைய உள்ளார். இதனால் உருவாக்கக்கூடிய புதாதித்ய யோகம் மேஷம், சிம்மம், துலாம் உள்ளிட்ட 3 ராசிகளுக்கு தடைகளும், பிரச்சனைகளும் நீங்க அற்புதமான அமையும்.

ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் நவகிரகங்களின் தலைவனான சூரியன் இளவரசன் என குறிப்பிடப்படும் புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை உருவாக்கும் புதாதித்ய யோகம் மிகவும் அற்புதமான பலனை தரக்கூடியன. கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் உடன், ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன் இணைய உள்ளார். தொடர்ந்து 17ல் சூரியன் சிம்ம ராசியில் நுழைந்த பின்னர், ஆகஸ்ட் 22-ல் புதனம் சிம்ம ராசியில் நுழைந்து செப்டம்பர் ஏழாம் தேதி வரை இந்த இரு கிரகங்களும் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளனர். எனவே, இந்த சூரியன்-புதன் சேர்க்கையால் எந்த மூன்று ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள்.

மேஷ ராசி

நவகிரகங்களின் தலைவன் சூரியனும், கிரகங்களின் இளவரசன் புதனும் இணைந்து சஞ்சரிக்கும் அமைப்பானது, உங்களுடைய ராசியை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.

கிரகங்களின் இந்த சுப சேர்க்கையானது உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குடும்பத்தினருடன் இணக்கமாக, மகிழ்ச்சியாக இப்பொழுது கழிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மன அமைதியை தரக்கூடியதாக இருக்கும். சூரியன் மற்றும் புதன் அருள் உங்களுக்கு திடீர் பண வரவை தருவதாக இருக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு, உங்களுடைய ராசிநாதன் சூரியனுடன், புதன் இணைந்த சஞ்சரிக்க கூடிய காலம் மிகவும் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் தொழில் தொடர்பாக சாதகமான சூழலும், சாதனைகளை புரியக்கூடிய அற்புதமான வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். சில காலமாக தடைபட்டு போன வேலைகள் தொடங்கும். இந்த காலத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவடையும் உங்களுடைய பொருளாதார ரீதியான முன்னேற்றம் மனதளவிலும், குடும்பத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களுக்கு சூரியன் மற்றும் புதனின் அற்புதமான சேர்க்கையால், ஒவ்வொரு அடியிலிருந்து அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை எதிர்பார்க்கலாம். விரிவாக உங்கள் வாழ்க்கையை மிகப்பெரிய நேர்மறையான சில நிகழ்வுகளும், சுப நிகழ்ச்சிகளும் நடக்க வாய்ப்புகளும் உண்டு. புதிதாக வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. மேலும் சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த காலத்தில் உங்களுடைய மன அமைதி அதிகரிக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை அருளால் வேலை நிமித்தமாக பயணங்கள் லாபத்தை தரக்கூடியதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் நல்ல பெயரை பெறலாம். உங்களுடைய கூட்டு முயற்சியை பெரிய அளவில் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும்.

சூரியன் – புதன் நல்லருள் பெற

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேஷம், சிம்மம் மற்றும் துலாம் ஆகிய மூன்று ராசிகளில் வாழ்க்கையில் ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை சந்திக்க கூடியதாக இருக்கும். இந்த சமயத்தில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை உங்கள் அதிர்ஷ்டத்திற்கான கதவைத் திறக்கும்.
காலத்தில் சூரியனை முழு நம்பிக்கையுடன் வழிபடுவதும், தினமும் சூரிய கவசம் பாராயணம் செய்வது நன்மை தரும். புதன்கிழமைகளில் புதன் பகவானே வழிபடுவதும், பெருமாள் கோவிலுக்கு செல்வது, பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பது நன்மை தரும்.

Source link