சூரிய பகவான் அக்டோபர் 17ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். இந்நிலையில் தற்பொழுது சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து வரக்கூடிய சூரியன், அக்டோபர் 24 ஆம் தேதி சித்திரையில் இருந்து சுவாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். ராகுவை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரத்தில் சூரியன் நுழைவதால் சில ராசிகளுக்கு நிதி ஆதாயம், திடீரென பெரிய வெற்றி, தலைமை பண்பு கிடைப்பது போன்ற பல்வேறு சாதகமான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
ஆயுள், ஆரோக்யம், தலைமை பண்பு உள்ளிட்டவற்றை தரக்கூடிய சூரிய பகவான் தற்பொழுது துலாம் ராசியில் நீச நிலையில் உள்ளார். இந்நிலையில் விரல் கிரகமான ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் அக்டோபர் 24 ஆம் தேதி நுழைய உள்ளார். பலம் குன்றிய நீச நிலையில் சூரியன் இருந்தாலும், சுவாதி நட்சத்திரத்தில் நுழையும் போது சில ராசிகளுக்கு தங்களுடைய தொழில், வேலையில் திடீர் உயர்வு, தன்னம்பிக்கை அதிகரிப்பது, நி பல்வேறு நன்மைகள் ஏற்படும். அக்டோபர் 24 முதல் நவம்பர் 8ம் தேதி வரை மிதுனம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சுப பலன்களை பெற உள்ளனர்.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசிக்கு, சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது நல்ல தாக்கங்களை தரும். குறிப்பாக நீங்கள் திடீர் நிதி ஆதாயத்தை பெறவும், உங்களுடைய வேலை, தொழிலில் வியர்வை ஏற்பட்டும் விதத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் வேலையை சுவாரசியமாகவும், புத்துணர்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய தலைமை பண்பு, வெளிப்பட வாய்ப்புகள் உண்டு.
நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுடைய நிலை உயரும். நிலுவையில் உள்ள பணிகளை சரியாக முடிக்க முடியும்.
துலாம் ராசி
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.. நீங்கள் செய்யும் வேலையில் இருக்கக்கூடிய சோம்பேறித்தனம், குழப்ப நிலை மாறும். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழில் என எதுவாக இருந்தாலும் அதில் உங்களுடைய நிலை மேம்படும். நீங்கள் வளர்ச்சியை பெறக்கூடிய விதத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
புதிய வருமான வழிகள் உருவாகும். உங்களுடைய கடின உழைப்பு நிச்சய பலனை தரக்கூடியதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் நல்லது பதவி உயர்வு கொடுக்க வாய்ப்பு உண்டு. தன வருவாய் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களுக்கு வரும் 24 ஆம் தேதி முதல், அடுத்த 20 நாட்கள் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். சாதகமான நல்ல மாற்றங்களை அனுபவிப்பீர்கள். உங்களுடைய தொழில் வளர்ச்சி உண்டாகும். நல்ல திட்டங்கள், செயல் திறன் அதிகரிப்பது என உங்களுக்கு பலவிதத்தில் நன்மைகள் ஏற்படும். உங்களுடைய தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடு வேலையில் அங்கீகாரத்தை பெற்று தரும். வேலையை சரியான நேரத்தில் முடிக்கவும், குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் வெகுவாக பயனைத் தரும். குறிப்பாக நிதிநிலை வலுவடையும். நீங்கள் திட்டமிட்ட பயணங்கள் சரியாக முடிக்கவும் அதன் மூலம் அனுகூலப் பலனை அடையவும் வாய்ப்புகள் உண்டு.
வேலை தொடர்பாக சில நல்ல செய்திகளை கிடைக்கும் இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும். குடும்பத்தில் நிம்மதியை உணர்வீர்கள். உறவுகளில் உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. மேலும் விரிவான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள ஒரு நிபுணரை அணுகவும்.
